For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்ன அகந்தை, ஆணவம், கோமாவிலேயே இருங்க நேசமணி: வடிவேலுவை விளாசிய நவீன்

By Siva
|
Actor Vadivelu interview: வடிவேலு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இயக்குனர்கள்- வீடியோ

சென்னை: பேட்டி ஒன்றில் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை விளாசிய வடிவேலுவை கண்டித்துள்ளார் இயக்குநர் நவீன்.

நேசமணி ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானதை அடுத்து வடிவேலு அளித்த பேட்டியில் அவர் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை பார்த்த இயக்குநர் நவீன் கோபம் அடைந்து ட்வீட் செய்துள்ளார்.

வடிவேலு நல்ல கலைஞன் தான், இருந்தாலும் இந்த அளவுக்கு அகந்தை கூடாது என்கிறார் நவீன். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிம்புதேவன்

அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் @chimbu_deven சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது

#T2

#NesamaniStayInComa

புலிகேசி

உங்களால் தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் @chimbu_deven @shankarshanmugh இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்

#T3

#NesamaniStayInComa

வசனம்

புலிகேசி intervel sceneல VSRagavan 'திரைக்கதையில் என்னதான் மாற்றம் செய்வது' என்கிற வசனத்தையும் காட்சியையும் நீங்கள் கடுமையாக எதிர்த்தீர்கள். இந்த டைலாக் வந்துச்சுனா படம் flop என்றீர்கள். என் இயக்குனர் நம்பிக்கையோடு இதுதான் சீன் என்றார். வெற்றி பெற்றார்

#T4

#NesamaniStayInComa

வியப்பு

23ஆம்புலிகேசி நான் உதவி இயக்குனராக வேலை செய்த முதல் படம். உங்கள் நடிப்பை பார்த்து வியந்ததை போல என் இயக்குனரின் புதிய சிந்தனைகளையும் எழுத்தையும் பார்த்து வியந்து வேலை செய்தேன். நிங்கள் புருடா விடுவது போல் அவர் எடுப்பார் கைபிள்ளை இல்லை. சுயம் கொண்ட இயக்குனர்

#T5

#NesamaniStayInComa

மகாகலைஞன்

வடிவேலு எனும் மகாகலைஞனை நான் என்றும் வியந்து ரசிப்பேன். அதன் காரணமாக உங்கள் அகந்தையை பொருத்தும் கொள்வேன். ஆனால் என் இயக்குனர் @chimbu_deven sir & நான் பெரிதாக மதிக்கும் @shankarshanmugh sir பற்றி மரியாதை குறைவாக பேசுவதை கண்டிப்பாக ஏற்க முடியாது.

#T6

#NesamaniStayInComa

சிரிப்பு

புலிகேசி படப்பிடிப்பிற்கு முன்பே அதன் bound script படித்து புல்லறித்து போனவன் நான். நீங்கள் கருத்து கரக்‌ஷன் சொன்னால் மரியாதைக்காக சிரித்தபடி அமைதியாக இருப்பார் எங்கள் இயக்குனர். ஆனால் கதையை மாற்றியதில்லை.

#T7

#NesamaniStayInComa

அகந்தை

24ஆம் புலிகேசி எனும் படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் இழப்பே. அதற்கு காரணம் உங்கள் அகந்தை என்றால் அந்த ஆணவத்தையும் அகந்தையையும் ரசிகனாகவும், @chimbu_deven சாரின் அசிஸ்டண்டாகவும் நான் கண்டிப்பேன்

#T8

#NesamaniStayInComa

English summary
Director Naveen has blasted actor Vadivelu for slamming directors Shankar and Chimbudeven.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more