»   »  இந்த நடிகரா ரஜினிக்கு வில்லன்?

இந்த நடிகரா ரஜினிக்கு வில்லன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு!

ரஜினிக்கு வில்லனாக பிரபல இந்திப் பட நடிகர் நவாசுதீன் சித்திக் நடிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலா, 2.ஓவுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்பராஜ். இந்தப் படம் ரஜினியின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டும் படமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கார்த்திக்.

Nawazuddin Siddiqui is Rajinis villain?

இந்த நிலையில் சமீபத்தில் மும்பை சென்றிருந்தார் கார்த்திக். அப்போது நவாசுதீன் சித்திக்கைச் சந்தித்து ரஜினி படத்தின் கதையை விரிவாகக் கூறியுள்ளார். சர்பரோஷ் படத்தில் அறிமுகமான நவாசுதீன், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், முன்னாபாய எம்பிபிஎஸ், ப்ளாக் ப்ரைடே, கஹானி என பல படங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்த்தவர்.

இப்போது தாக்கரே வரலாற்றுப் படத்தில் பால் தாக்கரேயாக நடித்து வருகிறார்.

ரஜினியின் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும். இப்போதைக்கு இசையமைப்பாளர் மட்டும் உறுதியாகியுள்ளார். அவர் அனிருத்.

English summary
Sources say that Bollywood actor Nawazuddin Siddiqui may be a baddie for Rajinikanth's next, directing by Karthik Subbaraj

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X