கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு செம ட்ரீட் வெயிட்டிங்.. கொண்டாட்டத்திற்கு ரெடியான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான 'நாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. பழைய கிளாசிக் படங்களை மறுவெளியீடு செய்வது தற்போதைய ட்ரெண்டாக வருகிறது. அதை பின் பற்றி, நவம்பர் 6ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தின் பிந்தைய தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்திய சினிமாவின் மைல்கல்லாகப் போற்றப்படும் திரைப்படம் 'நாயகன்' திரைப்படம், இப்படம் 1987 ஆம் ஆண்டு தியேட்டரில் வெளியானது. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத திரைப்படமாக கருதப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய இத்திரைப்படம், கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுடன், இந்திய சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. படம் வெளியானதிலிருந்து விமர்சன ரீதியான பாராட்டுகளையும், ரசிகர்களின் அன்பையும் பெற்றுள்ள இத்திரைப்படம், இன்றும் "கல்ட் கிளாசிக்" என்ற சிறப்புப் பட்டத்துடன் கொண்டாடப்படுகிறது.

கமல் பிறந்த நாள் ஸ்பெஷல்: இத்திரைப்படத்தில், கமல்ஹாசனுடன் ஜனகராஜ், சரண்யா பொன்வண்ணன், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, நாசர் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மும்பை நகரின் பின்னணியில் அமைக்கப்பட்ட இத்திரைப்படம், அந்நகரின் சமூக மற்றும் அரசியல் நிலவரங்களை உயிரோட்டமாகச் சித்தரித்தது. பி.சி. ஸ்ரீராமின் ஒளிப்பதிவு 'நாயகன்' படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. கதையின் உணர்வுபூர்வமான பிணைப்பு, கமல்ஹாசனின் பிரமிக்க வைக்கும் நடிப்பு,மணிரத்னத்தின் திறமையான இயக்கம் ஆகியவை இணைந்து இத்திரைப்படத்தை சினிமா வரலாற்றில் ஒரு அழியாத அத்தியாயமாக மாறியது,
நாயகன் ரீ ரிலீஸ்: கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் வெளியான 'தக் லைஃப்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இருப்பினும், 'நாயகன்' போன்ற படைப்புகள் இக்கூட்டணியை மறக்க முடியாததாகின. இத்திரைப்படம், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு 'நாயகன்' மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பழைய நினைவுகளை மீட்டெடுப்பதோடு, இன்றைய தலைமுறையினர் இத்திரைப்படத்தை திரையில் பார்த்து கொண்டாடும் வகையில் இருக்கும். நாயன் ரீ ரிலீஸ் கமல்ஹாசனின் பிறந்த நாள் ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











