»   »  ரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா?

ரஜினியின் அடுத்த ஹீரோயின்... தீபிகாவா அஞ்சலியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்தை முந்தத் துடிக்கும் கமல் ஹாஸன்!- வீடியோ

ஒருபக்கம் அரசியல் பணிகள் இருந்தாலும், அதற்கு சமமான முக்கியத்துவத்தை தனது சினிமா பணிகளுக்கும் தந்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

ஆன்மீக பயணத்தை முடித்து சென்னை திரும்பிய ரஜினி, சில தினங்களுக்கு முன் தனது அடுத்த பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜைச் சந்தித்துள்ளார்.

Nayan, Anjali and Deepika in consideration for Rajini movie

அடுத்த படத்தின் முழுக் கதைக்கான ஸ்க்ரிப்டையும் ரஜினியிடம் கொடுத்துள்ளார் கார்த்திக். நடிகர் நடிகைகள் தேர்வை கார்த்திக் விருப்பத்துக்கே விட்டுவிட்டாராம் ரஜினி.

இந்தப் படத்துக்காக மொத்தம் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினி. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிப்பவர் யார்? நயன்தாரா, தீபிகா படுகோனே, அஞ்சலி ஆகிய 3 பேர் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

நயன்தாரா ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். சிவாஜி, குசேலனிலும் நடித்துள்ளார். தீபிகா படுகோனே கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். ஒரு முழுமையான படத்தில் ரஜினியுடன் நடிக்கும் ஆசை அவருக்கு உள்ளது.

இவர்களில் அஞ்சலி முழுக்க முழுக்க கார்த்திக் சுப்பராஜ் சாய்ஸ். யார் ஹீரோயின் என்பது இந்த வாரம் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

English summary
Sources say that Nayanthara, Anjali and Deepika Padukone have in consideration for Rajinikanth's next movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X