»   »  ’காத்துவாக்குல’ வந்ததெல்லாம் பொய்யாம்... டிவிட்டரில் போட்டோ போட்டு முற்றுப்புள்ளி வைத்த நயன்!

’காத்துவாக்குல’ வந்ததெல்லாம் பொய்யாம்... டிவிட்டரில் போட்டோ போட்டு முற்றுப்புள்ளி வைத்த நயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ்சிவன் உடனான காதல் முறிந்து விட்டது என ஊடகங்களில் வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவராக இருந்து வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறுபவர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து, திறமையான நடிகையாக வலம் வரும் அவரின் சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்கள்.

காதல் தோல்விகள்...

காதல் தோல்விகள்...

முதலில் நடிகர் சிம்புவைக் காதலித்தார். ஆனால், அந்தக் காதல் முறிந்து போனது. பின்னர் பிரபுதேவைக் காதலித்தார். அவருக்காக மதமாற்றம் செய்து, சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அதுவும் மாறியது.

காதல் பரிசு...

காதல் பரிசு...

இந்நிலையில், தற்போது நானும் ரவுடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. தன் காதல் பரிசாக சென்னையில் விக்னேஷ் சிவனுக்கு அவர் வீடு ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சினை...

பிரச்சினை...

இதனால், விரைவில் தன் காதலரை அவர் கரம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நயனின் இந்தக் காதலும் முறிந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி பரவியது. விக்னேஷ்சிவன் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்குகிறார். இப்பட பிரச்சினை காரணமாகவே காதலர்களுக்குள் பிரச்சினை வந்ததாகவும் கூறப்பட்டது.

சிறந்த நடிகை...

ஆனால், தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்பற்றி வைத்துள்ளார் நயன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நானும் ரவுடி தான் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.

முற்றுப்புள்ளி...

முற்றுப்புள்ளி...

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் தாங்கள் பிரிந்ததாக எண்ணிய அனைவருக்கும் நயன்தாரா ஒரே புகைப்படத்தின் மூலம் பதில் அளித்துள்ளார்.

English summary
Actress Nayanthara received best actress award at Britannia 63rd Filmfare Awards South for the Tamil film Naanum Rowdy Dhaan. Here in the above picture, Nayanthara is seen elated showing the award to her director and boyfriend Vignesh Shivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil