»   »  ராகவா லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா?

ராகவா லாரன்ஸ் ஜோடியாக நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராகவா லாரன்ஸ் தற்போது 'மொட்ட சிவா கெட்ட சிவா', 'நாகா' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து 'சந்திரமுகி- 2' வில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Nayantara To Join Hands With Raghava Lawrence?

இந்நிலையில் முன்னணி இயக்குநர் ஒருவரின் அடுத்த படத்தில் லாரன்ஸ் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் கதையைக் கேட்டதும் லாரன்ஸ் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், இதில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியதாகவும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைநிறைய நயன்தாரா படங்கள் வைத்திருப்பதால் இதில் நடிக்க அவர் ஒப்புக் கொள்வாரா? என்ற தயக்கம் இருந்தததாம். ஆனால் படத்தின் கதையைக் கேட்டவுடன் லாரன்ஸுடன் சேர்ந்து நடிப்பது தனக்கு பெருமை எனக் கூறி நயன்தாரா இப்படத்திற்கு கால்ஷீட் வழங்கியதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
According to the latest buzz, actress Nayantara will join hands with Raghava Lawrence for an upcoming yet-untitled movie. Official confirmation regarding the same is awaited.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil