»   »  சாமி 2 படத்தில் விக்ரம் ஜோடி நயன்தாரா?

சாமி 2 படத்தில் விக்ரம் ஜோடி நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருமுருகனில் விக்ரமுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா மீண்டும் சாமி 2 படத்தில் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஹரி விக்ரம் மற்றும் திரிஷாவை வைத்து இயக்கிய சாமி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது வெற்றி பெற்ற படங்களின் இரண்டு, மூன்று பாகங்களை இயக்குநர்கள் எடுத்துவரும் நிலையில் சாமி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார்.

சாமி 2 படத்தில் நடிக்க உள்ளதாக இருமுகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம் தெரிவித்தார். ஹீரோயின் யார் என்ற கேள்வி எழுந்தது. திரிஷா இல்லை என்றால் யார் என்ற கேள்வி எழுந்தது.

மீண்டும் நயன்தாரா

மீண்டும் நயன்தாரா

சாமி திரைப்படம் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இருமுகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ளார்.

நயனை புகழ்ந்த விக்ரம்

நயனை புகழ்ந்த விக்ரம்

இருமுகன் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விக்ரம் . நயன்தாராவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர் என்னுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். நயன்தாரா இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேறு மாதிரி ‘மேஜிக்' போல் இருக்கும். அவர் தொழிலில் ஈடுபாடு உள்ள திறமையான நடிகை. அர்ப்பணிப்புடன் நடித்து இருக்கிறார் என்று பாராட்டினார்.

திரிஷாவும் நடிப்பார்?

திரிஷாவும் நடிப்பார்?

தற்போது சிங்கம் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை எஸ்3 என்ற பெயரில் இயக்கிவரும் அவர், அது முடிந்த பிறகு சாமி 2-ம் பாகத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த திரிஷா சின்ன வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.

ஐயா அறிமுகம்

ஐயா அறிமுகம்

நயன்தாராவை தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் ஹரிதான். எனவே குருநாதர் ஹரியின் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

திரிஷா இல்லைன்னா நயன்தாரா

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்க, ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். புலி, இருமுகன் படங்களை தயாரித்த ஷிபு தமீன்ஸ் சாமி-2 படத்தையும் தயாரிக்கிறார்.திரிஷா இல்லைன்னா நயன்தாரா என்பது இதில் உண்மையாகிவிடும் போல இருக்கிறதே?

English summary
Director Hari announced on Tuesday he will reunite with actor Vikram for the sequel to his 2003 Tamil blockbuster “Saamy”.Lot of names were suggested pair with Vikram finnaly soruces said Nayantara pair with Vikram in Saamy 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil