»   »  வாரிசு நடிகருக்காக கொள்கையை தகர்த்துவிட்டாரா நயன்தாரா?

வாரிசு நடிகருக்காக கொள்கையை தகர்த்துவிட்டாரா நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாலகிருஷ்ணாவின் 102வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் நயன்தாரா.

கோலிவுட், டோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளவர் நயன்தாரா. அவருடன் நடிக்க இளம் ஹீரோக்கள் எல்லாம் லைன் கட்டி நிற்கிறார்கள். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்கள்.

இதனால் நயன்தாரா மகிழ்ச்சியாக உள்ளார்.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 102வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

நயன்தாரா

நயன்தாரா

பாலகிருஷ்ணாவின் 102வது பட ஹீரோயின் நயன்தாரா என படத்தின் தயாரிப்பாளர் சி. கல்யாண் தெரிவித்துள்ளார். முன்னதாக நயன்தாரா சிம்மா, ஸ்ரீ ராமராஜ்ஜியம் ஆகிய இரண்டு படங்களில் பாலகிருஷ்ணாவுடன் நடித்துள்ளார்.

சம்பளம்

சம்பளம்

நயன்தாரா பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ரூ. 4 கோடிக்கு மேல் சம்பளம் கேட்டாராம். தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கொள்கை

கொள்கை

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தால் டூயட் பாடச் சொல்லி அனுப்பிவிடுவார்கள் என்று அவர்களுடன் சேர்ந்து நடிக்க மறுக்கிறார். இந்நிலையில் தான் அவர் பாலகிருஷ்ணா படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

English summary
Nayanthara is the leading lady of telugu actor Balakrishna's 102nd film to be directed by KS Ravikumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil