மொட்டை மாடியில் கவின் உடன் நயன்தாரா.. அப்போ அக்கா இல்லையா?.. ஜோடிதானா.. அசத்தும் ‘ஹாய்’ ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஹாய்' (Hi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கும் இந்தப் படத்தின் தலைப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிட்டுள்ளது. தலைப்புடன் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.

போஸ்டரில் நயன்தாராவும் கவினும் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு பேசுவது போலவும், மாடியில் நயன்தாரா கீழே லுங்கியுடன் கவின் என உள்ளனர். இருவரும் ஒரு பொதுவான விஷயத்தில் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதைச் சுற்றியே கதைக்களம் அமைந்திருப்பதாகவும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது. 'ஹாய்' ஒரு சொல், ஒரு தீப்பொறி, ஒரு கதை. நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் #HiMovie படத்தின் முதல் பார்வை இதோ!" என ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்ட பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Nayanthara and Kavin starrer Hi Movie first look out now
Photo Credit:

கடந்த ஜூலை மாதம், கவின் மற்றும் நயன்தாராவின் படம் குறித்த அறிவிப்புத் தகவல் வெளியாகி சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றியுள்ள விஷ்ணு எடவன், இந்தப் படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமாகிறார்.

கவின், நயன்தாராவின் ஹாய்: சமீபத்தில் கவின் தனது படம் குறித்துப் பேசுகையில், "இது ஒரு சாதாரண காதல் கதை, குடும்ப பொழுதுபோக்கு படம்" என்று தெரிவித்தார். இளம் ஆண் மற்றும் வயது முதிர்ந்த பெண்ணின் காதல் கதையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இது முற்றிலும் வேறுமாதிரியான கதை என இயக்குநர் கூறியிருந்தார்.

விஷ்ணு எடவன் அறிமுகம்: படப்பிடிப்புத் தொடக்கத்தின் போது இயக்குநர் விஷ்ணு எடவன், "நன்றி அரோகரா. என் நயன்தாரா மேடத்திற்கும், என் கவின் அண்ணாவிற்கும். பயணம் இன்று தொடங்குகிறது. ரொம்ப ரொம்ப நன்றி லலித் சார்" என்று சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கவின் ரொம்ப ஹேப்பி: கவின் தனது X பக்கத்தில், "முதலில் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாவது மகிழ்ச்சி, அவரது அறிமுகப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் இன்னும் மகிழ்ச்சி. ஜென் மார்ட்டின் இசையமைப்பாளருடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுவது பெரும் மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்புவார்கள் என நம்புகிறேன். இந்தத் புராஜெக்ட்டில் எங்களை ஒன்றிணைத்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் லலித் சாருக்கு நன்றி" எனப் பதிவிட்டிருந்தார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க, லியோன் ப்ரிட்டோ ஒளிப்பதிவு செய்கிறார். பிருந்தா கோபால் நடன இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

வரிசை கட்டும் படங்கள்: நயன்தாரா தற்போது சுந்தர் சியின் பிரமாண்ட படமான 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் 'மனா சங்கரா வரப்பிரசாத் காரு' படத்திலும் நடிக்கிறார்.

மேலும், மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் நடிக்கும் மலையாளப் படமான 'பேட்ரியாட்'டிலும் நயன்தாரா ஒரு பகுதியாக இருக்கிறார். இது தவிர 'ராக்காயி', 'மண்ணங்கட்டி சின்ஸ் 1960', 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' ஆகிய படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு: தொடர்ந்து தோல்வியை தழுவினாலும் புதுமுக இயக்குநர்களுடன் இணைந்து கவின் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நெல்சனின் உதவி இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் வெளியான ப்ளடி பெக்கர் படம் தோல்வியை தழுவியது. நடன இயக்குநரான சதீஷ் இயக்குநரான கிஸ் படம் சமீபத்தில் வெளியாகி பெரிதாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், பாடலாசிரியரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் ஹாய் படத்தையும் தைரியமாக எடுத்து கவின் நடித்துள்ளார். நயன்தாராவுக்கும் சமீப காலமாக வெற்றிப் படங்கள் அமையாத நிலையில், இருவருக்கும் ஹாய் படம் வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X