பிரபுதேவா, நடிகை நயன்தாரா மீண்டும் இணைகிறார்களா..? என்ன சொல்கிறார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்?
சென்னை: நயன்தாராவும் பிரபுதேவாவும் படத்தில் மீண்டும் இணைவதாக வந்த தகவல் பற்றி தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார், நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் அவரை.
அவரும் பிரபுதேவாவும் முன்பு காதலித்து வந்தது தெரிந்த கதை. பின்னர் அவர்கள் பிரிந்ததை அடுத்து, இப்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் .

கருப்புராஜா வெள்ளைராஜா
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபுதேவாவும் நயன்தாராவும் இணைந்து படத்தில் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. அதாவது, நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக, கடந்த 2017-ம் ஆண்டு, 'கருப்புராஜா வெள்ளைராஜா' என்ற படம் ஆரம்பிக்கப்பட்டது.

ஐசரி கணேஷ்
இந்தப் படத்தில் விஷால், கார்த்தி ஹீரோக்களாக நடிப்பதாகவும் பிரபுதேவா இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஹீரோயினாக நடிகை சாயிஷா பேசப்பட்டு இருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தமானார். ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்தார். இந்தப் படத்தின் மூலம் ரூ.10 கோடி நிதியை, நடிகர் சங்கத்துக்குக் கட்டிடம் கட்ட அளிப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது.

நடிகை நயன்தாரா
படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில், சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து இப்போது மீண்டும் இந்தப் படத்தைத் தொடங்கப் போவதாகவும் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாயின. பிரபுதேவாவும் நயன்தாராவும் காதல் முறிவுக்குப் பிறகு மீண்டும் ஒரே படத்தில் பணிபுரிய இருப்பதால், சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

உண்மையில்லை
இந்நிலையில், இந்தச் செய்தியை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். அவர் கூறும்போது, கருப்புராஜா வெள்ளைராஜா படம் மீண்டும் தயாராகவில்லை. அதுகுறித்து வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றார். இதற்கு முன் நடந்த நடிகர் சங்க தேர்தலில் ஒன்றாக இருந்த ஐசரி கணேஷும் விஷாலும் இப்போது எதிரெதிர் முகாம்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நெற்றிக்கண்
நடிகை நயன்தாரா, இப்போது, மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள இந்த படம், லாக்டவுனுக்கு பிறகு ரிலீஸ் ஆக இருக்கிறது. அடுத்து நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











