ப்பா.. எவ்ளோ க்யூட்.. இரட்டை குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா.. விக்கி செம ஹாப்பி!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறி உள்ளனர்.

லேடி சூப்பர்ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இந்த ஆண்டு பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்களை திகிலடையச் செய்து வருகிறது.

டயானா மரியம் குரியன்

டயானா மரியம் குரியன்

தொகுப்பாளினியாக இருந்த டயானா மரியம் குரியன் மலையாள திரையுலகில் நயன்தாராவாக அறிமுகமானார். தமிழில் சரத்குமாரின் ஐயா படம் மூலம் என்ட்ரி கொடுத்த நயன்தாரா வருஷா வருஷம் மறக்காமல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார். கடந்த 7 ஆண்டுகளாக தனது காதலர் மற்றும் கணவர் விக்னேஷ் சிவன் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா இந்த ஆண்டு இன்னும் ஸ்பெஷலாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

உயிர், உலகம்

உயிர், உலகம்

இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை பிரபலங்கள் சூழ மாமல்லபுரம் அருகே உள்ள ஒரு தனியார் சொகுசு ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அடுத்த 4 மாதத்தில் நடிகை நயன்தாரா வாடகைத் தாய் முறைப்படி இரு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவானார். அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் வைத்துள்ளனர்.

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ்

குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ்


இதுவரை விக்னேஷ் சிவன் உடன் ரொமாண்டிக் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்த நயன்தாரா இந்த முறை தனது இரு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான கனெக்ட் படத்தின் ரிலீஸை முன்னிட்டு பிரத்யேக பேட்டி அளித்த நயன்தாரா தன்னுடைய வாழ்க்கை பற்றி ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியிருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

இதுவரை தென்னிந்தியாவில் லேடி சூப்பர்ஸ்டாராக அசத்தி வந்த நிலையில், அடுத்த ஆண்டு நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜவான் படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X