Don't Miss!
- News
பேனா சின்னத்திற்கு எதிரான வழக்கு.. 2 துறைதான் பதில் கொடுத்திருக்கு.. ஒத்திவைத்த பசுமை தீர்ப்பாயம்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருப்பதி கோயிலில் செருப்பு அணிந்து போட்டோஷூட்.. நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு குவியும் கண்டனங்கள்!
சென்னை: திருப்பதி கோயிலில் காலில் செருப்பு அணிந்து கொண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் நடத்தியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கடைசியாக சினிமா பிரபலங்கள் பலரையும் பல மைல் தூரம் அழைத்து பிரம்மாண்டமாக நடத்த முடியாது என்பதாலும், நெட்பிளிக்ஸுக்கு திருமணத்தை பெரிய தொகைக்கு விற்க முடியாது என்பதாலும் திருமண இடத்தை நயன்தாரா மாற்றியதாக கூறப்படுகிறது.
Recommended Video
திருமண நிகழ்ச்சியிலேயே பல கெடுபிடிகள் காரணமாக பல பிரபலங்கள் சங்கடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது திருப்பதியில் அத்துமீறி நடந்து கொண்டதற்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
தாடி இல்லாத சசிகுமாரை உள்ளே விட மறுத்த ஸ்டார் ஹோட்டல் - ருசிகர சம்பவம்

மகாபலிபுரத்தில் திருமணம்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சுமார் 25 கோடிக்கு நயன்தாரா திருமண நிகழ்ச்சி விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் காரணமாக எந்தவொரு புகைப்படங்களும் வீடியோக்களும் திருமண நிகழ்வின் போது வெளியே கசியவில்லை.

கடும் கட்டுப்பாடு
திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்றும் செல்போன் உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் கேஜெட்டுகளையும் கொண்டு வரக் கூடாது என்றும் பார்கோடு ஆக்டிவேட் ஆனால் தான் அனுமதி என்றும் ரசிகர்கள் உள்ளே நுழைய அனுமதியே கிடையாது என்றும் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர். நயன்தாரா திருமணத்தை காண 700 கி.மீ., இருசக்கர வாகனத்தில் கணவருடன் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இந்நிலையில், இவர்கள் மட்டும் திருப்பதியில் எப்படி விதிகளை மீறலாம் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

திருப்பதியில் செருப்பு காலுடன்
திருப்பதியின் திருமாட வீதியில் பக்தர்கள் யாரும் செருப்பு காலுடன் செல்ல மாட்டார்கள். ஆனால், நயன்தாரா விக்னேஷ் சிவன் போட்டோஷூட் நடத்துவதற்காக செருப்பு அணிந்து சென்றதாக தற்போது பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அங்குள்ளவர்களே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்
இதுவரை யாருக்குமே திருப்பதியில் எந்தவொரு படப்பிடிப்பிற்கும், போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட்டுக்கும் அனுமதி வழங்கப்படாத நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒரு போட்டோகிராஃபர்கள் டீமுடன் அங்கே சென்று போஸ்ட் வெட்டிங் போட்டோஷூட் நடத்தியதும் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கோயிலில் இப்படி செய்யலாமா
நடிகை நயன்தாராவை கட்டி அணைத்துக் கொண்டும், அவருக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாக கிளம்பி உள்ள சர்ச்சைகளால் நெட்டிசன்கள் புதிதாக திருமணமான தம்பதியினரை விளாசித் தள்ளி வருகின்ற்னர்.

போட்டோஷூட் டீம் அத்துமீறல்
மேலும், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மட்டுமின்றி அவர்களை போட்டோ எடுக்க வந்த டீமும் காலணிகளை அணிந்து கொண்டு, கேமராக்களுடன் திருப்பதி சன்னதிக்கு மிக அருகிலேயே போட்டோக்களை எடுத்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன. சிலர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.