ப்பா.. ஸ்பெயின் சாலையில் ரொமான்டிக் நடனம்.. நயன்தாரா - விக்னேஷ் சிவனின் வேறலெவல் க்ளிக்ஸ்!

பார்சிலோனா: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், பார்சிலோனாவில் இருவரும் சாலையில் கைகளை கோர்த்துக் கொண்டு ரொமான்டிக் நடனமாடி உள்ளனர்.

ஸ்பெயின் டூர் புகைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

நயன்தாராவின் கண்கவர் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராமை ஃபாலோ செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஸ்பெயினில் நயன்

ஸ்பெயினில் நயன்

கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், இரண்டாவது ஹனிமூனுக்கு இருவரும் பறந்து சென்றுள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். அதற்கேற்ப ஹோட்டல் அறைகளிலும், பார்சிலோனாவின் பிரபலமான இடங்களிலும் இருவரும் மாறி மாறி தங்களது காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

ரோட்டில் ரொமான்டிக்

ரோட்டில் ரொமான்டிக்

ஸ்பெயினில் உள்ள அழகிய சாலைகளில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடனமாடும் புகைப்படங்களை தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். அழகு பொங்க விக்னேஷ் சிவன் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவிலும் நயன்தாரா அப்படியே தேவதை போல மின்னுகிறார்.

பார்சிலோனாவில் பறந்த கொடி

பார்சிலோனாவில் பறந்த கொடி

ஸ்பெயின், பார்சிலோனவில் சுற்றுலா செய்து வரும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சுதந்திர தினத்தையும் அங்கே கொண்டாடியது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியக் கொடியை பார்சிலோனாவில் இருவரும் பிடித்த படி போட்டோக்களை எடுத்து அதையும் ஷேர் செய்து லைக்குகளை அள்ளி இருந்தனர்.

சூட்டிங் ஓவரா

சூட்டிங் ஓவரா

ஷாருக்கானின் ஜவான் மற்றும் அகமது இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயம் ரவியின் இறைவன் படத்தில் நயன்தாராவின் போர்ஷன் முழுவதும் முடிந்து விட்டதா? மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கு நயன் திரும்புவார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Recommended Video

மனைவி Nayanthara-வுடன் வெளிநாடு பறந்த Wikki...எங்கு தெரியுமா? *Kollywood
ஏகே 62

ஏகே 62

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் விக்னேஷ் ஏகே 62 படத்தின் ஆரம்ப பணிகளை எப்போது துவங்குவார் என்றும் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படப்பிடிப்புகளுக்குள் பிசியாக மூழ்கி விடுவதற்கு முன்பாக தனது மனைவி உடன் ஜாலி டூர் அடித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X