Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்.. அட! அந்த விஷயத்தை யாரு கவனிச்சிக்கிறாங்க தெரியுமா?
சென்னை: தமிழ் திரையுலகமே வெகுநாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை நடைபெற உள்ளது.
மெஹந்தி நிகழ்ச்சி நேற்று இரவே ஆரம்பித்து விட்டதாகவும், சங்கீத் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறும் என்றும் நாளை காலை இந்து முறைப்படி திருமணம் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டைட் செக்யூரிட்டி உடன் நடைபெற உள்ள இந்த திருமணத்தின் மொத்த வெட்டிங் பிளானையும் அந்த பிரபல நிறுவனம் தான் செய்து வருகிறதாம்.
பொன்னியின்
செல்வன்
டீசர்
வெளியீட்டு
விழா..
தஞ்சையில்
நடைபெற
முக்கிய
காரணம்
?

மகாபலிபுரத்தில் திருமணம்
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நாளை காலை 4 மணி முதல் 7 மணிக்குள் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரெசார்ட்டில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொகுப்பாளராக இருந்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்துள்ள நயன்தாராவை திருமணக் கோலத்தில் காண ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் காத்திருக்கின்றனர்.
Recommended Video

வெட்டிங் பிளானர்
பெரிய இடத்து திருமணங்களை எல்லாம் சரியாகவும், எந்தவொரு தடங்கல் இல்லாமல் பந்தக்கால் நடுவதில் இருந்து தாம்பூலப் பை கொடுத்து வழியனுப்பி வைப்பது வரை அனைத்து ஏற்பாடுகளையும் வெட்டிங் பிளானர் எனப்படும் திருமண ஏற்பாட்டாளர்கள் தான் செய்து வருகின்றனர். அப்படி நயன்தாரா திருமண ஏற்பாடை இப்படி ஏகப்பட்ட பாதுகாப்புகளுடன் பிரம்மாண்டமாக செய்யப் போவது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கத்ரீனா கைஃப் திருமணம்
பாலிவுட் நடிகர் விக்கி கெளசல் மற்றும் நடிகை கத்ரீனா கைஃப் திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 9ம் தேதி நடைபெற்றது. ராயல் வெட்டிங்காக இதே போல பக்கா செக்யூரிட்டியுடன் நடந்த அந்த திருமணத்தை நடத்திய அதே வெட்டிங் பிளானர் தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

ஷாதி ஸ்குவாட்
ஷாதி ஸ்குவாட் எனும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த வெட்டிங் பிளானர் நிறுவனம் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். விராத் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் உள்ளிட்ட பல பிரபலங்களின் திருமணங்களையும் இவர்கள் சிறப்பாக செய்துள்ளனர். கேத்ரீனா கைஃப் மற்றும் நயன்தாரா நெருங்கிய தோழிகள் என்பதால், சமீபத்தில் கத்ரீனா கைஃப் திருமணத்தை நடத்திய அதே வெட்டிங் பிளானரை நயன்தாரா தனது திருமணத்துக்கும் புக் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.