Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாவ்.. சிரித்த முகத்துடன் வந்த நயன் - விக்னேஷ் சிவன்.. அவ்வளவு க்யூட்.. டிரெண்டாகும் புகைப்படம் !
சென்னை : கேரளாவுக்கு சென்றுள்ள புதுமண தம்பதிகளின் க்யூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது.
Recommended Video
ரஜினி, அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ்,விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் நயன்தாரா.
ராஜா ராணி, மாயா,டோரா, அறம் நானும் ரவுடிதான், மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் என கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து லேடி சூப்பர் ஸ்டார் ஆனார் நயன்தாரா.
எப்பவும்
நாங்கதான்
நம்பர்
ஒன்..
மீண்டும்
நிரூபித்த
மாஸ்
ஜோடி..
யார்ன்னு
பாருங்க!

காதல் மலர்ந்தது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து, கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்து கொண்டிருந்தனர். இந்த ஜோடியை பார்க்கும் அனைவரும் எப்போது கல்யாணம் என கேட்டு வந்த நிலையில், நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

தடபுடலான திருமணம்
இதையடுத்து, ஜூன் 9ந் தேதி மகாபலிபுரத்தில் ரிசாட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் மந்திரம் ஓத தடபுடலாக திருமணம் நடந்து முடிந்தது. இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான்,சரத்குமார் , கேஎஸ் ரவிக்குமார், அட்லி, விஜய்சேதுபதி,விஜய், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகளுன் கலந்து கொண்டார்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில்
நயன்தாரா திருமணத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், பெரிய தொகைக்கு திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு செல்போன் கொண்டுவரக்கூடாது என்றும், திருமண அழைப்பிதழுடன் ஒரு கோடும் கொடுக்கப்பட்டு அவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருப்பதியில் சாமி தரிசனம்
திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, தனியார் ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், நயன்தாரா, எங்களுக்கு நீங்கள் தந்த ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து உங்களின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

கொச்சி விமான நிலையத்தில்
புதுமணத் தம்பதிகள் நயன்தாராவின் பெற்றோரை சந்திக்க கொச்சிக்கு சென்றுள்ளனர். கேரளாவில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் இவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில், நயன்தாரா ஆரஞ்சு நிற உடையிலும், விக்னேஷ் Bal Main T shirt அணிந்து இருந்தார். மேலும், கேரளாவுக்கு வந்த இந்த ஜோடிக்கு பூக்கள் கொடுத்து வரவேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது. இன்னும் சில நாட்கள் கேரளாவில் உள்ள நயன்தாராவின் சொந்த வீட்டில் இருவரும் தங்கி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.