கையில் குழந்தைகளுடன் நயன்-விக்கி தம்பதியின் தீபாவளி கொண்டாட்டம்..வாழ்த்து சொல்லி மகிழும் ரசிகர்கள்
சென்னை: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் கடந்த 9ம் தேதி ட்வீட் செய்திருந்தார்.
அதன்பின்னர் வாடகைத்தாய் பிரச்சினையில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி தற்போது அதிலிருந்து மீண்டு வந்து சூப்பராக தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர்.

விக்னேஷ் சிவனுடன் திருமணம்
'ஐயா' படத்தில் ஹீயோயினாக அறிமுகமான நயன்தாரா, இன்று தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வருகிறார். ரஜினி, விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ள நயன்தாரா. ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு ஜலியாக ஹனிமூன் சென்று வந்தனர்.

இரட்டை ஆண் குழந்தைகள்
நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 9ம் தேதி விக்னேஷ் சிவன் "நானும் நயனும் அம்மா அப்பாவாகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது" என பதிவிட்டிருந்தார். திருமணமாகி 4 மாதத்தில் எப்படி என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், தமிழக அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. அதற்கான ஆதராங்களை விக்னேஷ் - நயன் சமர்பித்தனர்.

தீபாவளி வாழ்த்து
வாடகைத்தாய் விவகாரம் ஓய்ந்த நிலையில், தற்போது தங்கள் குழந்தைகளுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளனர் நயன் - விக்கி தம்பதி. அதனை வீடியோவாகவும் வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக் கூறியுள்ளனர். வேஷ்டி சட்டையில் விக்கியும், பிங்க் நிற சேலையில் நயனும் ஆளுக்கொரு குழந்தையை தங்கள் கைகளில் தாங்கிப் பிடித்துள்ளனர். பின்னர் இருவரும் கோரஸாக ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறுகின்றனர். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பகிர்ந்து, ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டது தான்
சில ஆண்டுகளுக்கு முன் நயன்தாரா இருவரும் சென்னை மேயர் பிரியா ராஜனை சந்தித்தனர். அப்போதே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொடுத்த பெண்ணும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருமணத்திற்கு முன்பே இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துவிட்டதாகவும், தகுந்த முன்னெச்சரிக்கை விதிகளை கடைபிடித்து தான் குழந்தை பெற்றுள்ளனர் என்பதும் சமீபத்தில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











