»   »  சிம்பு பர்த்டே பார்ட்டியில் நயன்: மறுபடியும் முதலில் இருந்தா?

சிம்பு பர்த்டே பார்ட்டியில் நயன்: மறுபடியும் முதலில் இருந்தா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு அளித்த பிறந்தநாள் பார்ட்டியில் நண்பேன்டா தனுஷ், முன்னாள் காதலி நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிம்பு தனது 31வது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். இதையொட்டி திரை உலக பிரபலங்கள் நேரிலும், செல்போனிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர். வாழ்த்தோடு சேர்த்து பார்ட்டி இல்லையா சிம்பு என்று கேட்டிருந்தனர்.

இந்நிலையில் சிம்பு தனது பிறந்தநாளையொட்டி பார்ட்டி கொடுத்துள்ளார்.

கேக்

கேக்

ஹேப்பி பர்த்டே எஸ்டிஆர் 31 என்று எழுதப்பட்ட கேக்கை சிம்பு வெட்டினார்.

நயன்தாரா

நயன்தாரா

சிம்புவின் பார்ட்டியில் அவரது முன்னாள் காதலி நயன்தாரா கலந்து கொண்டார். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். அவர்களுக்கு இடையே மீண்டும் காதல் மலர்வதாக கூறப்படும் வேளையில் நயன்தாரா இந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார்.

முத்த போட்டோ

முத்த போட்டோ

முன்னதாக நயன்தாரா சிம்புவை காதலித்து பிரிந்தபோது அவர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த போட்டோ இணையதளத்தில் கசிந்தது. அந்த போட்டோவை சிம்பு தான் கசியவிட்டிருப்பார் என்று கிசுகிசுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா

பிரபுதேவா

சிம்புவை பிரிந்த நயன்தாரா இயக்குனர், நடிகர், டான்ஸ் மாஸ்டர் என்று பன்முகம் கொண்ட பிரபுதேவாவை காதலித்து திருமணம் செய்வதற்காக சினிமாவில் இருந்து விலகினார். ஆனால் அந்த காதலும் முறிந்துபோகவே மீண்டும் நடிக்க வந்துவிட்டார்.

தனுஷ்

தனுஷ்

சிம்புவின் பர்த்டே பார்டியில் அவரது நண்பர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

English summary
Former ladylove Nayanthara and good friend Dhanush have attended Simbu's birthday party.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil