»   »  நயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ - இனி எல்லாம் சுபமே!

நயன்தாராவின் கையில் மாறிய டாட்டூ - இனி எல்லாம் சுபமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ் சினிமாவில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டுமல்லாமல், அவர் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பதிவேற்றும் புகைப்படங்களுக்கும் காதல் எமோஜிகளைப் பறக்கவிடுகிறார்கள் ரசிகர்கள்.

நயன்தாரா தன்னைத் தேடி வரும் எல்லாப் படங்களையும் ஒப்புக்கொள்வதில்லை. கவனமாகத் தேர்வு செய்து மட்டுமே படங்களை ஒப்புக்கொள்கிறார்.

அதாவது கதாநாயகி வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்தான் அதிகம் நடித்து வருகிறார். அதனால்தான் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடிகிறது.

விக்னேஷ் சிவன் காதல் :

விக்னேஷ் சிவன் காதல் :

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நெருங்கிப் பழகி வருகிறார் நயன்தாரா. இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டாலும் இதுவரை அவர்கள் வெளிப்படையாக உறுதி செய்யாமல் இருந்து வருகின்றனர்.

நியூயார்க் போட்டோ :

நியூயார்க் போட்டோ :

விக்னேஷ் சிவன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அவரை நியூயார்க் அழைத்துச் சென்றார் நயன்தாரா. அங்கு தடபுடலாக பிறந்த தினத்தை கொண்டாடி அசத்தியதுடன் அன்புப் பரிசும் தந்திருக்கிறார். விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

நயன்தாரா டாட்டூ :

நயன்தாரா டாட்டூ :

நயன்தாராவின் தனது இடது கையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு டாட்டூ வரைந்திருந்தார். அதில் நயன்தாராவின் அப்போதைய காதலரின் பெயரான பிரபுதேவா பெயர் 'Pரபு' என இருந்தது.

புதிய டாட்டூ :

புதிய டாட்டூ :

'Pரபு' என இருந்த டாட்டூவை Positivity என்று தற்போது மாற்றியுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நயன்தாரா, தனது காதல் தோல்வியை கூட பாஸிட்டிவிட்டியாக கருதி புதிய காதலுக்குத் தயாராகிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

English summary
Actress Nayanthara has been approached by director Vignesh Shivan. Nayanthara went to New York to celebrate the birthday of Vignesh Shivan. In this situation, Nayanthara has changed the tattoo that she had already drawn.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil