»   »  விஷாலால் அஜீத்தை ஓரங்கட்டி சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா

விஷாலால் அஜீத்தை ஓரங்கட்டி சிரஞ்சீவிக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விசுவாசம் படத்திற்கு கொடுத்திருந்த கால்ஷீட்டை நயன்தாரா சிரஞ்சீவி படத்திற்கு கொடுத்துவிட்டாராம்.

தமிழ் பட தயாரிப்பாளர் சங்க ஸ்டிரைக்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. நயன்தாரா அஜீத்தின் விசுவாசம் படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார்.

Nayanthara concentrates on Sye Raa Narasimha Reddy

ஸ்டிரைக்கால் விசுவாசம் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. இதனால் அஜீத் படத்திற்கு கொடுத்த டேட்ஸை சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு கொடுத்துவிட்டார் நயன்தாரா.

விசுவாசம் படப்பிடிப்பு தற்போதைக்கு துவங்குவது போன்று இல்லை என்பதால் டேட்ஸை வீணாக்காமல் இருக்க இப்படி செய்துள்ளார் நயன்தாரா. சயீரா நரசிம்ம ரெட்டிபடத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா தயாரிக்கிறார்.

சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்கள். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

English summary
Nayanthara has given importance to Chiranjeevi starrer Sye Raa Narasimha Reddy over Ajith's Viswasam. Viswasam shooting is getting delayed because of Tamil film producers council strike.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X