»   »  நயன்தாரா போதைப்பொருள் விவகாரத்தில்... மலேசியா விமான நிலைய ஊழியர் 'அதிரடி' சஸ்பெண்ட்

நயன்தாரா போதைப்பொருள் விவகாரத்தில்... மலேசியா விமான நிலைய ஊழியர் 'அதிரடி' சஸ்பெண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நயன்தாராவிடம் விசாரணை செய்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து மலேசியா விமான நிலைய ஊழியர் ஒருவர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனந்த் சங்கர் இயக்கும் இருமுகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மலேசியா சென்ற நயன்தாரா திரும்பி வரும்போது விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட விவரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் போதைப்பொருள் வைத்திருந்ததாக நடிகை நயன்தாராவின் பெயர்கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டு வந்தது.

இருமுகன்

இருமுகன்

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்து வரும் இருமுகன் படப்பிடிப்பிற்காக நயன்தாரா கடந்த மாதம் மலேசியா சென்றார்.படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அவர் திரும்பி வந்தபோது விமான நிலையத்தில் சோதனை செய்யபட்டார்.இதனால் நயன்தாரா போதைப்பொருள் வைத்திருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகின.

நடந்தது என்ன

நடந்தது என்ன

இந்நிலையில் இந்த விஷயத்தில் உண்மையாக நடந்தது என்ன என்று தற்போது முழு விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.இருமுகன் படத்தின் பத்திரிக்கை தொடர்பாளர் யுவராஜ் இது தொடர்பான விவரங்களை தெரிவித்து இருக்கிறார். அவர் கூறும்போது "படப்பிடிப்பிற்காக மலேசியா சென்ற நயன்தாரா படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இந்தியா திரும்ப விமான நிலையம் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு தனது உதவியாளர்களுடன் வந்தார்.

2 விமான நிலையங்கள்

2 விமான நிலையங்கள்

மலேசியாவில் 2 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு விமான நிலையத்தில் நயன்தாராவின் பாஸ்போர்ட்டுக்கு வொர்க் பெர்மிட்(வேலை செய்ய வந்தவர்) முத்திரை அளித்திருந்தனர்.இந்நிலையில் மற்றொரு விமான நிலையத்தில் அந்த முத்திரை அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவரிடம் விமான நிலைய ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்

விசாரணைக்குப் பின்

நயன்தாராவிடம் சிறிது நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை இந்தியா திரும்ப அனுமதித்தனர். திட்டமிட்ட படி அவர் கடந்த 3ம் தேதி கேரளாவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் இது போன்ற வதந்திகளை யார் திட்டமிட்டு பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை.இது தொடர்பாக மலேசியா காவல் துறையினரிடம் இருமுகன் படபிடிப்புக் குழு சார்பாக புகார் அளித்திருக்கிறோம்" என்று யுவராஜ் தெரிவித்திருக்கிறார்.

ஊழியர் சஸ்பென்ட்

ஊழியர் சஸ்பென்ட்

இந்த விசாரணை நடந்த போது எடுத்த படத்தை விமான நிலைய ஊழியர் ஒருவர் ‘பேஸ்புக்' மூலம் வெளியிட்டார். தொடர்ந்து அது 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. நயன்தாராவின் பாஸ்போர்ட் நகல் மற்றும் நயன்தாராவிடம் விசாரணை நடந்தது பற்றிய படம் வெளியானது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த படத்தை வெளியிட்ட விமான நிலைய ஊழியர் ஒருவரை சஸ்பெண்டு செய்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

English summary
Sources Said Nayanthara Inquiry Related Photos Released Issue, now Malaysia airport Employee was Suspended.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil