For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்கிட்ட அப்படியொரு கெட்ட பழக்கம் இருக்கு.. எது பண்ணாலும் ட்ரோல் பண்றாங்க.. நயன்தாரா ஓபன் பேட்டி!

  |

  சென்னை: நெற்றிக்கண் படத்திற்காக டிடியுடன் பேட்டிக் கொடுத்த நடிகை நயன்தாரா தற்போது கனெக்ட் படத்திற்காக அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

  கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஏகப்பட்ட விஷயங்கள் பற்றி மனம் திறந்து நடிகை நயன்தாரா பேசி உள்ளார்.

  விரைவில் 20 ஆண்டுகளை சினிமாவில் நயன்தாரா நிறைவு செய்ய உள்ள நிலையில், டிடி நீலகண்டன் ஏகப்பட்ட விஷயங்களை அவரிடம் இருந்து கறந்துள்ளார்.

  Connect Review: மகளுக்குள் புகுந்த ஆவியை விரட்டினாரா நயன்தாரா? கனெக்ட் விமர்சனம் இதோ! Connect Review: மகளுக்குள் புகுந்த ஆவியை விரட்டினாரா நயன்தாரா? கனெக்ட் விமர்சனம் இதோ!

  ரசிகருக்கு ஐ லவ் யூ

  ரசிகருக்கு ஐ லவ் யூ

  கனெக்ட் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா தன்னை பார்த்து 'ஐ லவ் யூ நயன்தாரா' என கூச்சலிட்ட ரசிகரை பார்த்து நானும் லவ் யூ டூங்க என பதில் அளித்து உற்சாகத்தில் ஆழ்த்திய வீடியோ டிரெண்டாகி வந்த நிலையில், தற்போது கனெக்ட் படத்தின் ப்ரமோஷனுக்காக நயன்தாரா அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி டிரெண்டாகி வருகிறது.

  அஜித் வழியில்

  அஜித் வழியில்

  நடிகர் அஜித் போல நயன்தாராவும் அதிகமாக ப்ரமோஷன்களில் பங்கேற்க மாட்டேன் என்கிற முடிவுடன் பல படங்களுக்கு ப்ரமோஷனை தவிர்த்து வருகிறார். ஆனால், தங்கள் சொந்த பேனரான ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு மட்டும் அடிக்கடி இதுபோன்ற பேட்டி மற்றும் ப்ரீமியர் ஷோ செல்வது உள்ளிட்ட ப்ரமோஷன்களில் கலந்து கொள்கிறார் நடிகை நயன்தாரா.

  டிடியுடன் பேட்டி

  டிடியுடன் பேட்டி

  நெற்றிக்கண் படம் வெளியாவதற்கு முன்னதாக விஜய் டிவியில் டிடி உடன் நயன்தாரா அளித்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. முதன் முதலில் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்த விஷயத்தை அவர் ஷேர் செய்திருந்தார். ஆனால், அப்போதும் தங்களுக்கு பதிவு திருமணம் ஆனதை அவர் கூறவில்லை. இந்நிலையில் கனெக்ட் படத்தின் ப்ரமோஷனுக்காக மீண்டும் பேட்டி கொடுத்துள்ளார் நயன்தாரா.

  உமன் சென்ட்ரிக் படங்கள்

  உமன் சென்ட்ரிக் படங்கள்

  20 ஆண்டுகள் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், எப்படி போச்சுன்னே தெரியல என க்யூட்டாக பேச ஆரம்பித்த நடிகை நயன்தாரா நான் நடிக்க வந்த காலத்தில் எல்லாம் உமன் சென்ட்ரிக் படங்கள் என்றால் என்ன என்றே தெரியாது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்கள் வரணும்னு விரும்பினேன். ஆனால், இப்போ நிறைய தயாரிப்பாளர்கள் உமன் சென்ட்ரிக் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது சந்தோஷமாக இருக்கு என்றார்.

  என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு

  என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு

  படத்துக்கு படம் லுக்கில் வித்தியாசம் காட்டுறீங்களே எப்படி என்று டிடி கேட்க, என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு என்பது போல, யாராவது என்னால ஒரு விஷயம் முடியாதுன்னு சொன்னா.. ஏன் என்னால முடியுமே.. ட்ரை பண்ணி பார்க்கலாமே என நடிப்பேன். அதுக்கு பெயர் தலைகணம் இல்லை. செல்ஃப் பிலிவ் தானே என செம க்யூட்டாக பேசி உள்ளார். பில்லா படத்தில் போல்டாகவும், யாராடி நீ மோகினி படத்தில் ஹோம்லியாக சைலன்ட்டாகவும் ஒரே சமயத்தில் நடித்தேன் எனக் கூறியுள்ளார்.

  எதை பண்ணாலும் ட்ரோல் பண்றாங்க

  எதை பண்ணாலும் ட்ரோல் பண்றாங்க

  ஒல்லியா இருந்தாலும் ட்ரோல் பண்றாங்க, உடம்பு போட்டாலும் ட்ரோல் பண்றாங்க.. ட்ரோல் பண்றவங்களுக்கு ஏதாவது கிடைச்சா போதும், ட்ரோல் பண்ணலாம்னு பண்றாங்க.. கனெக்ட் படத்தில் சோகமா இருக்க சீனில் இருந்து ஒரு போட்டோ எடுத்துப் போட்டு என்ன ஆச்சு? நயன்தாராவுக்குன்னு கேட்கிறாங்க.. அது சோகமான சீன் வேற எப்படி நடிக்க முடியும் என பேசி உள்ளார்.

  சோஷியல் மீடியாவில் இருக்காரா

  சோஷியல் மீடியாவில் இருக்காரா


  நடிகை நயன்தாரா சோஷியல் மீடியாவில் இல்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் அவர் குறித்து போடப்படும் அனைத்து ட்ரோல்கள் குறித்தும் இந்த பேட்டியில் பேசி உள்ள நிலையில், நயன்தாரா ரகசியமாக சோஷியல் மீடியாவில் இருக்கிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் எழுப்பி வருகின்றனர்.

  English summary
  Nayanthara Exclusive Interview: She talks about Social media trolls and how she make look change in every movie and present a unique look for movies. Nayanthara shared lot of details in DD Neelakandan's latest interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X