»   »  ஸ்ட்ரைக் நடைபெறும்போது ரிலீஸ் ஆகும் நயன்தாரா படம்!

ஸ்ட்ரைக் நடைபெறும்போது ரிலீஸ் ஆகும் நயன்தாரா படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சம்பளத்தைக் குறைப்பாரா நம்பர் ஒன் நயன்தாரா?- வீடியோ

சென்னை : தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் காலவரையற்ற ஸ்ட்ரைக் நடத்தி வரும் நிலையில், புதிய படங்கள் எதுவும் இந்த மாதம் முழுவதும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் பழைய படங்களுக்கு தியேட்டர்களில் வரவேற்பு உருவாகியுள்ளது. இதைப் பயன்படுத்தி மற்ற மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய படங்களை தமிழில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' என்ற படம் தற்போது 'வாசுகி' என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 29-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டப்பிங் படம் என்பதால் இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் இருக்காது.

Nayanthara film to be release during cinema strike

பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும் அயோக்கியர்களுக்கு பாரபட்சமின்றி மரணத்தை பரிசளிக்க வேண்டும் என்பது தான் 'புதிய நியமம்' படத்தின் கதைக் கரு. இப்படத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்த மூவரை நயன்தாரா எவ்வாறு கொலை செய்கிறார் என்பதை திரில்லர் ஸ்டோரியாக சொல்லப்பட்டுள்ளது.

இப்படத்தை சாஜன் என்பவர் இயக்கியிருந்தார். புதிய படங்கள் வெளியாகததால் ஏற்கெனவே மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தை டப்பிங் செய்து தமிழ், தெலுங்கில் வெளியிட இருக்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

English summary
Mammootty and Nayanthara starrer 'puthiya Niyamam''s tamil dubbing 'Vasuki' will be released on on March 29th during cinema strike period.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X