Just In
- 12 min ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 46 min ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 1 hr ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
- 1 hr ago
கதை சொன்ன இயக்கத்துக்கு அப்படி ஷாக் கொடுத்த 'பேபி' ஹீரோயின்.. செம கடுப்பில் படக்குழு!
Don't Miss!
- News
மேற்கு வங்கத்தை.. வங்கதேசத்துடன் இணைக்க முயலும் மம்தா.. மே. வங்க பாஜக தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
உங்களுக்கு முகப்பரு அதிகமா வருமா? இந்த சமையலறை பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...
- Automobiles
மீண்டும் விற்பனைக்கு வரும் கவாஸாகி கேஎல்ஆர்650 அட்வென்ச்சர் பைக்? 2022ல் அறிமுகமாகிறது...
- Sports
சின்னதா தான் பேசியிருக்கேன்... பெரிய அளவுல மாற்றம்... பிளாக்வுட் பரபர பேட்டி!
- Finance
11 ஆண்டுகளில் இல்லாத அளவு தங்கத்தின் தேவை சரிவு.. மறக்க முடியாத 2020..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
‘ஒங்கள போடணும் சார்’... நயன்தாரா டயலாக் தான்.. அதுக்காக இப்படியா தலைப்பு வைப்பீங்க ரமேஷ்?
சென்னை: ஜித்தன் ரமேஷ் நடிக்கும் புதிய படத்திற்கு, நயன்தாராவின் வசனமான 'ஒங்கள போடணும் சார்' எனப் பேர் வைக்கப்பட்டுள்ளது.
ஜித்தன் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் 'ஜித்தன்' ரமேஷ். இவர் ஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு 5 கதாநாயகிகள். சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி என ஐந்து பேருமே அறிமுக நாயகிகள் ஆவர்.
நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாரா பேசும், 'ஒங்கள போடணும் சார்' என்ற டயலாக்கையே இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.

ஜாலி, கேலி வாழ்க்கை:
இப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், "நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாக தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும்.

பிரச்சினை:
சவாலாக அந்த வேலையை எடுத்துச்செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை? அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதை கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம்.

புதிய அனுபவம்:
வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களை கிண்டல் கேலி செய்வதை பார்த்திருப்போம்.. மாறாக, இந்த படத்தில் பெண்கள், ஆண்களை கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.

மீண்டும் ஜித்தன் ரமேஷ்:
நீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப்படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.

நயன் டயலாக்:
இந்த படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது "நானும் ரௌடி தான்" படத்தில் நயன்தாரா பேசிய "ஒங்கள போடணும் சார்" வசனம், நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம், நயன்தாராவுக்கு நன்றி" என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.