விமர்சித்தவர்கள் முகத்தில் கரியை பூசிய நயன்தாரா.. எல்லாமே பக்கா பிளான்.. பாராட்டும் ரசிகர்கள்!

சென்னை: காத்துவாக்குல விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இத்தனை ஆண்டுகள் காதலித்து வருகின்றனர் என்று பார்த்தால், ரகசியமாக ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வாழ்ந்து வந்தது தற்போது அவர்கள் அளித்துள்ள விளக்கத்தின் மூலம் தெரிய வருகிறது.

கடந்த அக்டோபர் 9ம் தேதி நயன்தாராவும் தானும் இரு ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகி விட்டோம் என இயக்குநர் விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டார்.

பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி வந்த நிலையில், ட்ரோல்கள், விமர்சனங்கள், விவாதஙக்ள், புகார்கள் என வாடகைத்தாய் பிரச்சனை பூதாகரமானது.

கடுமையான விமர்சனம்

கடுமையான விமர்சனம்

திருமணமாகி 4 மாதத்திற்குள் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றுக் கொண்டார் என பிரபலங்கள் முதல் நெட்டிசன்கள் வரை பலரும் பலவிதமாக பேசி கடுமையான விமர்சனத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் மத்தியில் வைத்தனர். சட்டத்தை ஏமாற்றினால் 10 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கும் என்றும் மிரட்டினர்.

சந்தோஷமே போச்சு

சந்தோஷமே போச்சு

இரு குழந்தைகள் தங்களுக்கு கிடைத்துள்ள நிலையில், அவர்களுடன் கொஞ்சி விளையாடும் சந்தோஷமே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு போய்விட்டதாக தகவல்கள் வெளியாகின. எந்தவொரு ட்ரோலுக்கும் எதிர்வினை ஆற்றாமல் சரியான இடத்தில் தங்களது விளக்கத்தை தற்போது இருவரும் அளித்துள்ளனர்.

கரிபூசிய நயன்தாரா

கரிபூசிய நயன்தாரா

தனது சொந்த விஷயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த பலரது முகத்திலும் தற்போது நடிகை நயன்தாரா நல்லா கரியை பூசி விட்டார் என நயன்தாராவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ட்வீட் போட்டு வருகின்றனர். முன்பே இது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்திருக்கலாமே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

பக்கா பிளான்

பக்கா பிளான்

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்கும் போதே, அவரை ரகசியமாக பதிவு திருமணம் செய்தது முதல் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சட்டப்படி என்ன என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் பக்காவாக திட்டமிட்டு செய்துள்ளார் நயன்தாரா என்றும் விக்னேஷ் சிவன் இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

திருமணத்தை மறைத்தது ஏன்

திருமணத்தை மறைத்தது ஏன்

6 ஆண்டுகளுக்கு முன்பாகவே விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் பதிவு திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தனை ஆண்டுகளாக அதை மறைக்க காரணம் என்ன? என்றும் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்தது ஏன் என்றும் டிடி நீலகண்டன் நிகழ்ச்சியில் கூட தங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பதை மட்டுமே நயன்தாரா சொன்னது ஏன் என மீண்டும் பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X