என் தங்கம் கொடுத்த சர்ப்ரைஸ்.. நயன்தாராவுடன் பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

துபாய்: இயக்குநர் விக்னேஷ் சிவனின் 37வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பிறந்தநாளை முன்னிட்டு கணவர் மற்றும் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார் நடிகை நயன்தாரா.

உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவுக்கு கீழ் நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்

விக்னேஷ் சிவன் பிறந்தநாள்

1985ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் பிறந்தவர் விக்னேஷ் சிவன். 2012ம் ஆண்டு சிம்புவின் போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வேலையில்லா பட்டதாரி படத்தில் இன்ஜினியர் கதாபாத்திரத்தில் நடித்த விக்னேஷ் சிவன், 2015ம் ஆண்டு விஜய்சேதுபதி, நயன்தாரா வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.

நயன்தாரா மனதிலும்

நயன்தாரா மனதிலும்

நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம்பிடித்த விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா மனதிலும் இடம் பிடித்தார். காதல் தோல்விகளால் துவண்டு கிடந்த நயன்தாராவுக்கு நம்பிக்கை துணையாக விக்னேஷ் சிவன் வந்த நிலையில், இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காதலித்து இந்த ஆண்டு கடைசியில் திருமணம் செய்து கொண்டனர்.

புர்ஜ் கலிஃபாவில் பர்த்டே பார்ட்டி

புர்ஜ் கலிஃபாவில் பர்த்டே பார்ட்டி

உலகின் மிகவும் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவுக்கு தனது கணவரின் குடும்பத்தையே அழைத்துச் சென்ற நயன்தாரா அங்கே விக்னேஷ் சிவனுக்கு அளித்த சர்ப்ரைஸ் பர்த்டே பார்ட்டி போட்டோக்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாராவின் நெத்தியோடு நெத்தி முட்டியபடி பிறந்தநாளை கொண்டாடிய போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

விக்னேஷ் சிவன் குடும்பம்

விக்னேஷ் சிவன் குடும்பம்

இயக்குநர் விக்னேஷ் சிவனின் அம்மா மற்றும் தங்கையை துபாய்க்கு அழைத்துச் சென்று தனது கணவரை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி உள்ளார் நடிகை நயன்தாரா. இப்போது தான் ஸ்பெயின் டூர் முடிந்த நிலையில், அடுத்ததாக பர்த்டேவை சாக்காக வைத்து துபாய்க்கு டூர் அடித்து வருகிறீர்களா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

அன்பான இயக்குநர்

அன்பான இயக்குநர்

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அஜித் படம்

அஜித் படம்

ஏகே61 படம் முடிந்ததும் இந்த ஆண்டே ஏகே62 படத்தின் வேலைகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தின் அம்மா பாடல் மற்றும் நாங்க வேறமாறி பாடல்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். விக்னேஷ் சிவனின் வொர்க் பிடித்துப் போன நிலையில், ஒரு கதை சொல்லுங்களேன் என கேட்ட அஜித் உடனடியாக விக்னேஷ் சிவனின் கதையை ஓகே செய்த நிலையில், ஏகே 62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X