»   »  'இந்த' விஷயத்தில் நயன்தாராவுக்கு அக்கா கிம் கர்தாஷியன்

'இந்த' விஷயத்தில் நயன்தாராவுக்கு அக்கா கிம் கர்தாஷியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகை கிம் கர்தாஷியன் தான் காதலரின் பெயரை குறிக்கும் எழுத்தில் முதன் முதலாக கம்மல் போட்டவர்.

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவரது பெயரை கையில் பச்சை குத்தினார்.

விக்னேஷ் சிவன் மீதான காதலை வேறு விதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

 கம்மல்

கம்மல்

விக்னேஷ் சிவன் மீது உள்ள காதலால் அவர் பெயரின் முதல் எழுத்தான வி(V) வடிவத்தில் கம்மல் செய்து காதில் போட்டுள்ளார் நயன்தாரா. அந்த கம்மல் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ளது.

 கிம் கார்தாஷியன்

கிம் கார்தாஷியன்

அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் கேன்யே வெஸ்ட்டை காதலித்தபோது அவரது பெயரின் முதல் எழுத்துகளான கே மற்றும் டபுள்யூ ஆகிய எழுத்துகளில் கம்மல் செய்து போட்டார்.

 முதல் ஆள்

முதல் ஆள்

காதலை வெளிப்படுத்த காதலரின் பெயரின் முதல் எழுத்தில் கம்மல் செய்து போட்ட பெருமை கிம் கர்தாஷியனையே சேரும். கிம் கேன்யேவை திருமணம் செய்து அவர்களுக்கு நார்த் என்ற மகளும், செயின்ட் என்ற மகனும் உள்ளனர்.

 நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் கிம் வழியில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
Hollywood TV reality show star Kim Kardashian was the first to wear studs bearing the first letter of boyfriend. Nayanthara is the latest to copy Kim's style.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil