»   »  நயன்தாரா, த்ரிஷா, ஸ்ருதி, ஹன்சிகா எல்லாம் வாக்களிக்க வரவில்லையே, ஆனாலும்...

நயன்தாரா, த்ரிஷா, ஸ்ருதி, ஹன்சிகா எல்லாம் வாக்களிக்க வரவில்லையே, ஆனாலும்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடிகர் சங்க தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்கவில்லை. ஆனால் தங்களின் வாக்குகளை தபால் மூலம் அளித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நடிகர், நடிகைகள் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலையிலேயே வாக்களித்துவிட்டார்.

Nayanthara, Hansika, Trisha missing in polling booth

கமல்ஹாஸன் கவுதமியுடன் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். இளையதளபதி விஜய் நேரில் வந்து வாக்களித்தார். அஜீத், மாதவன் ஆகியோர் வாக்களிக்க வரவில்லை. அதே சமயம் நடிகைகள் நயன்தாரா, ஸ்ருதி ஹாஸன், சமந்தா, ஹன்சிகா, தமன்னா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர்களையும் வாக்குச்சாவடி பக்கம் காணவில்லை.

அவர்கள் எல்லாம் நேரில் வந்தால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்று விஷால் அவர்களை தபால் மூலம் வாக்களிக்குமாறு கூறினாராம். விஷால் அணியின் ஆதரவாளர்களான அவர்கள் அவரின் அறிவுரைப்படி தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

அதனால் தான் அம்மணிகள் யாரும் வாக்குச்சாவடி பக்கமே வரவில்லை.

English summary
Leading ladies Nayanthara, Hansika, Shruti Haasan, Samantha, Tamanna, Amy Jackson and some others cast their votes in nadigar sangam election via post.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil