"சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற"...ஷுட்டிங்கின் போது விக்னேஷ் சிவனை திட்டிய நயன்தாரா
சென்னை : ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து டைரக்டர் விக்னேஷ் சிவனை, நடிகை நயன்தாரா திட்டிய விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. இதை மிக முக்கியமான நபர் ஒருவரே பேட்டி ஒன்றில் கூறி இருப்பது தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரொமான்டிக் காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை ரெளடி பிக்சர்சுடன் இணைந்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

ஒரே சமயத்தில் பல பேட்டி
இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது இருந்தாலும் பெரிய அளவில் ப்ரொமோஷன் போன்று எதுவும் இந்த படத்திற்கு நடத்தப்படவில்லை. இதற்கு பல விதமான காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷனுக்காக விஜய் சேதுபதியும், விக்னேஷ் சிவனும் ஒரே சமயத்தில் பல மீடியாக்களுக்கு ஒரே சமயத்தில், அடுத்தடுத்து பேட்டி கொடுத்துள்ளனர்.

அவங்க காதல் பற்றி தெரியாது
அப்படி அளித்த பேட்டியின் போது விஜய் சேதுபதியிடம், ஷுட்டிங் ஸ்பாட்டில் நிஜமான காதல் ஜோடி இருந்துள்ளது. அது பற்றி சொல்லுங்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, அப்படி ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் இருவருமே வேலையில் கரெக்டாக இருப்பார்கள். நானும் ரெளடி தான் ஷுட்டிங் முடிந்த பிறகு பலரும் என்னிடம் இவர்களின் காதல் பற்றி கேட்டனர். அப்படி எதையும் நான் பார்க்கவில்லை என்று தான் சொன்னேன். பிறகு நானே ஒருநாள் தனியாக விக்கியிடம் கேட்ட போது தான் அவர் உண்மையை சொன்னார் என்றார்.

முத்தக் காட்சிக்கு நோ சொன்ன நயன்
பிறகு பேசிய விக்னேஷ் சிவன், நானும் ரெளடி தான் ஷுட்டிங் பாதி நடந்து கொண்டிருக்கையில் நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். காதலிக்க ஆரம்பித்த புதிதில் நெருக்கமாக முத்தம் கொடுக்க வருவதை போன்ற ஒரு சீன் எடுக்க வேண்டும். அப்போது நயன்தாரா வந்து, இதை வேண்டுமானால் வேறு மாதிரி மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்றார். முதலில் எனக்கே ஒரு மாதிரி இருந்தது. பிறகு இதில் என்ன இருக்கிறது என நினைத்து, ஓகே எடுக்கலாம் என முடிவு செய்து விட்டேன்.

ஏன்டா இப்படிலாம் பண்ற...
அந்த சீன் எடுக்கும் போது, இன்னும் நெருக்கமாக வாங்க...இன்னும் வாங்க என நான் சொன்னதால் கடுப்பான நயன்தாரா, மெதுவாக பக்கத்தில் வந்து, சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற என திட்டிவிட்டு போனார் என்றார். மேலும் நானும் ரெளடி தான் படம் முடிந்ததும், இன்னொரு செமயான படம் பண்ணிய பிறகு தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்து விட்டோம். காத்து வாக்குல காதல் கதையை அதற்கு முன்பே தயார் செய்து வைத்திருந்ததால் அதையே எடுக்கலாம் என 2016 லிருந்து முயற்சி செய்து கொண்டிருந்தேன்.

படம் முடிந்ததும் கல்யாணம்
ஆனால் அது பண்ண முடியாமல் போனதால், தானா சேர்ந்த கூட்டம் படம் பண்ண போய் விட்டேன். அதை முடித்து மீண்டும் இந்த படத்தை துவங்கும் போது கொரோனா வந்து விட்டது. ஒரு வழியாக சமாளித்து படத்தை முடித்து விட்டோம். அதனால் காத்துல வாக்குல ரெண்டு காதல் படம் பர்சனாலவும் எங்களுக்கு மிக நெருக்கமான படம் என்றார் விக்னேஷ் சிவன். அதோடு பேட்டியின் போது பலமுறை தானும், நயன்தாராவும் ஒரே வீட்டில் இருப்பதை திரும்ப திரும்ப அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











