குழந்தைகளுக்காக முடிவை மாற்றிய நயன்தாரா… பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இப்படி ஒரு ஏற்பாடா?

சென்னை: நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.

அதன்பின்னர் வாடகைத்தாய் பிரச்சினையில் சிக்கிய நயன் - விக்கி தம்பதி தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

நயன் – விக்கி தம்பதி

நயன் – விக்கி தம்பதி

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்து காட்டி வரும் நயன்தாரா, கடந்த ஜூன் மாதம் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நயன் - விக்கி திருமணத்தில், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நயனும் விக்கியும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொண்டு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில், அவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

நயன் - விக்கி தம்பதியினருக்கு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இது சர்ச்சையான நிலையில், தமிழக அரசு சார்பில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடைபெற்றது. அதில், விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் நயன் - விக்கி தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. அதற்கான ஆதராங்களை சமர்பித்த அவர்கள், பதிவுத் திருமணம் மார்ச் மாதமே நடைபெற்றதையும் குறிப்பிட்டனர். இதனால், வாடகைத்தாய் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

குழந்தைகளுடன் முதல் பிறந்தநாள்

குழந்தைகளுடன் முதல் பிறந்தநாள்

இந்நிலையில், நயன்தாரா வரும் 18ம் தேதி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். நயன் விக்கியை காதலிக்க தொடங்கிய பின்னர், அவரது பிறந்தநாளை வெளிநாட்டில் சென்று கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு பிறந்தநாளையும் வெளிநாடு சென்று ஜாலியாக என்ஜாய் செய்துவந்த நயன், இந்தாண்டு முதன்முறையாக அவரது குழந்தைகளுடன் கொண்டாட முடிவு செய்துள்ளாராம். இதற்காக ரொம்பவே ஸ்பெஷலான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருந்துடன் கொண்டாட்டம்

விருந்துடன் கொண்டாட்டம்

சென்னையில் உள்ள தங்களது வீட்டிலேயே பிறந்தநாளை கொண்டாடவுள்ள நயன், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து கொடுக்க முடிவு செய்துள்ளாராம். திருமணத்திற்குப் பிறகு முதல் பிறந்த நாள், அதுவும் இரட்டை குழந்தைகளுடன் கொண்டாடுவதால், குடும்பத்தினரையும் நெருங்கிய நண்பர்களையும் மட்டும் விருந்துக்கு அழைத்துள்ளாராம் நயன். தீபாவளி தினத்தில் குழந்தைகளுடன் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் நயன் - விக்கி தம்பதி. இந்நிலையில், இப்போது முதன்முறையாக குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடவுள்ள நயனுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூற தொடங்கிவிட்டனர்.

ஷூட்டிங்கில் பிஸி

ஷூட்டிங்கில் பிஸி

நயன்தாரா தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன், தீபிகா படுகோன், பிரியா மணி ஆகியோருடன் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் தயாரிக்கும் படத்தில் நடிக்க நயன் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாராவுடன் மாதவன், சித்தார்த் ஆகியோரும் நடிக்கவுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X