»   »  இமைக்கா நொடிகள்: நயன்தாரா அதர்வாவுக்கு ஜோடி இல்லை

இமைக்கா நொடிகள்: நயன்தாரா அதர்வாவுக்கு ஜோடி இல்லை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா நடிக்கின்றபோதிலும் அவர் அதர்வாவுக்கு ஜோடி இல்லையாம்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் படம் இமைக்கா நொடிகள். இந்த படத்தில் இரு நாயகிகள். அதில் ஒருவராக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.

Nayanthara is not Atharva's pair in Imaikkaa Nodigal

நயன்தாரா அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து ஞானமுத்து கூறுகையில்,

என் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் அவரது கதாபாத்திரம் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. அவர் அதர்வாவுக்கு ஜோடியாகவும் நடிக்கவில்லை.

அதர்வாவுக்கு ஜோடியாக்க அவருக்கு ஏற்ற ஹீரோயினை நாங்கள் தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

English summary
Imaikaa Nodigal director Ajay Gnanamuthu said that Nayanthara is not Atharva's love interest in his movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X