»   »  நயன்தாரா தொழிலில் சரியாக இருப்பார்: ஜீவா

நயன்தாரா தொழிலில் சரியாக இருப்பார்: ஜீவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா தொழிலில் சரியாக இருப்பார் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜீவா, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த திருநாள் படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. ஜீவா, நயன்தாரா ஜோடி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஜீவா படத்திற்காக கடுமையாக உழைத்தது திரையில் தெரிகிறது.


இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டூடியோ தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜீவா கூறுகையில்,


திருநாள்

திருநாள்

திருநாள் படம் நன்றாக ஓடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இது என் திரையுலக வாழ்வில் முக்கியமான படம். இயக்குனர் ராம்நாத் என்னிடம் கதை சொன்னபோதே இது உங்களுக்காகவே தைத்த சட்டை போன்று இருக்கும் என்றார். கதையின் முதல் பாதியை கேட்டதும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.


உழைப்பு

உழைப்பு

எந்த படத்தில் நடித்தாலும் அது நன்றாக அமைய வேண்டும் என்று நினைத்து தான் நடிப்பேன். படம் நன்றாக வர கடுமையாக உழைப்பேன். திருநாள் படத்திற்காகவும் கடுமையாக உழைத்தேன்.


நயன்தாரா

நயன்தாரா

நானும், நயன்தாராவும் ஈ படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தோம். அதன் பிறகு 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேர்ந்து நடித்துள்ளோம். எங்கள் ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொழில்

தொழில்

நானும், நயன்தாராவும் பொருத்தமான ஜோடி என்கிறார்கள். என் குடும்பத்தாருக்கு திருநாள் படம் பிடித்திருந்தது. அனைவருக்கும் நயன்தாராவுடன் நடிப்பது பிடிக்கிறது. அவர் தொழிலில் சரியாக இருப்பார்.
English summary
Actor Jiiva appreciated his Thirunaal leading lady Nayanthara as a perfect professional.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil