நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி: நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட சின்மயி

By Siva

Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

சென்னை: நயன்தாராவை கேவலமாக பேசிய ராதாரவிக்கு தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார் பாடகி சின்மயி.

கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். அதை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனோ ராதாரவி மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றார்.

விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த பாடகி சின்மயி கவலை அடைந்துள்ளார். சின்மயி ஏற்கனவே ராதாரவி மீது புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன்

ஒரு நடிகர் நயன்தாராவை பற்றி கேவலமாக பேசியும் அந்த நடிகைக்கு ஒருவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று விக்னேஷ் சிவன் கூறினால், எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் சின்மயி.

நடிகர் சங்கம்

பிற யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதால் என் விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த ஆள் வெற்றிகரமான நடிகையை மேடையில் கேவலப்படுத்தியுள்ளார். முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார் சின்மயி.

கண்டனம்

ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசியதற்கு எந்த நடிகராவது கண்டனம் தெரிவிக்க மாட்டாரா என்று நேற்றில் இருந்து காத்திருக்கிறார் சின்மயி.

நயன்தாரா

கூப்பிடுறவங்க கூப்பிடுறவங்கன்னு சொல்றாரே ராதாரவி. அந்த கூப்பிடற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X