மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேரும் ஜெயம் ரவி...மாஸ் திட்டம் வைத்துள்ள டைரக்டர்
சென்னை : ஜெயம் ரவி- நயன்தாரா இணையும் படத்தின் ஷுட்டிங்கிற்காக செம பிளானை போட்டு வருகிறார் டைரக்டர். இந்த படம் பற்றிய தகவல்களும் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. ஷுட்டிங்கை துவங்குவதற்கு முன்பே இப்படி ஒரு பிளானா என அனைவரும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு போட்டோவை வைத்து நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு ரகசியமாக திருமணமே முடிந்து விட்டதாக பல தகவல்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றனர். இந்த போட்டோ மற்றும் நயன்தாராவின் அடுத்த படங்கள் பற்றிய தகவல்கள் செம டிரெண்டாகி வருகிறார். ஆனால் நயன்தாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

தனி ஒருவன் டீமில் நயன்தாரா
தற்போது மீண்டும் இணையும் தனி ஒருவன் பட டீமில் நயன்தாராவும் இணைய போகிறாராம். பொன்னியின் செல்வன், அகிலன் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து வரும் ஜெயம் ரவி, டைரக்டர் அகமது இயக்கும் புதிய படம் ஒன்றிலும் நடிக்க போகிறாராம். ஏற்கனவே அகமது இயக்கிய என்றென்றும் புன்னகை படத்தில் நடித்தார் ஜெயம் ரவி.

பாதியில் நிறுத்தப்பட்ட ஜன கன மன
அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்து பெரிய பட்ஜெட் படமாக ஜன கன மன படத்தை இயக்கி வந்தார் அகமது. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராணுவ அதிகாரி ரோலில் ஜெயம் ரவி நடித்து வந்தார். இந்த படத்தின் சில காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா, லாக்டவுன் காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

மீண்டும் இணையும் கூட்டணி
2021 ல் ஜன கன மன இல்லாமல் அகமது இயக்கும் மற்றொரு படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதா இல்லை ஜன கன மன படம் தானா என எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தற்போது, ஜெயம் ரவி- அகமது கூட்டணியில் பெயரிடப்படாத படம் ஒன்றில் தனி ஒருவன் பட டீம் மீண்டும் இணைய உள்ளதாம். ஜெஆர் 29 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்.

செம பிளானா இருக்கே
ஜெஆர்29 படம் இந்தியாவிலேயே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் ஷுட்டிங் மார்ச் மாத மத்தியில் துவங்கி, மே மாத இறுதிக்குள் படத்தின் வேலைகளை முடிக்க டைரக்டர் பிளான் செய்துள்ளாராம். இது சைக்கோ த்ரில்லர் கதை கொண்ட படமாம். பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்க போகிறாராம்.


Click it and Unblock the Notifications











