மல்லாக்க படுக்க மாட்டேன்.. அப்படியொரு பயம் எனக்கு.. பீதியை கிளப்பிய நயன்தாரா.. ஏன் தெரியுமா?

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தான் மல்லாக்கவே படுக்க மாட்டேன் என்றும் அதற்கு அவர் சொல்லி உள்ள காரணமும் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

உமன் சென்ட்ரிக் படங்கள் குறித்தும், பெங்களுக்கு திருமணம் என்பது ஒரு இன்டர்வெல் இல்லை என அவர் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தனக்கு பேய் மீதெல்லாம் இல்லை என சொல்லி விட்டு நயன்தாரா போட்ட லிஸ்ட் தான் அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

இன்டர்வெல் கிடையாது

இன்டர்வெல் கிடையாது

பெண்களுக்கு திருமணம் என்பது இன்டர்வெல் கிடையாது. திருமணத்திற்கு பிறகு அவர்கள் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்கிற எந்தவொரு கட்டாயமும் இல்லை. திருமணம் ஒரு ஹாப்பி ஃபீலிங் அவ்வளவு தான். அதன் காரணமாக பெண்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை எனக் கூறியுள்ளார்.

பேய் பயம் இருக்கா

பேய் பயம் இருக்கா

நடிகை நயன்தாரா நடிப்பில் நாளை வெளியாக உள்ள கனெக்ட் படம் ஹாரர் படம் என்பதால், நயன்தாராவுக்கு உண்மையிலேயே பேய் மீது நம்பிக்கை இருக்கா? என்றும் பேய் பயம் இருக்கா என டிடி நீலகண்டன் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு அவரது பதில்களை அழகாக வெளிக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் பேய் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை என சொன்ன நயன்தாரா அடுத்தடுத்து பேசியது தான் ரசிகர்களை திகில் அடைய செய்தது.

மல்லாக்க படுக்க மாட்டேன்

மல்லாக்க படுக்க மாட்டேன்

சின்ன வயசுல யாரோ சொன்னதை கேட்டுட்டு அதன் பின்னர் மல்லாக்க படுக்கவே மாட்டேன், ஒன் சைடாக கை வச்சுத் தான் தூங்குவேன் என நயன் சொன்னதும் ஏங்க என கேட்ட டிடிக்கு செம ஷாக் கொடுத்தார் நயன்தாரா. நேரா படுத்தா யாராவது நம் மேல வந்து அப்படியே இறங்கிடுவாங்களாம்னு சொன்னதை கேட்டதுமே டிடிக்கு அல்லு இல்லை.

லைட் ஆஃப் பண்ண மாட்டேன்

லைட் ஆஃப் பண்ண மாட்டேன்

மேலும், தூங்கும் போது எப்பவுமே லைட் ஆஃப் பண்ணாமத்தான் படுப்பேன் என தனது பேய் பயம் குறித்த லிஸ்ட்டை நயன்தாரா அடுக்கிக் கொண்டே செல்ல அதை கேட்ட ரசிகர்கள் இவரது பேட்டியே செம த்ரில்லாக இருக்கே என கமெண்ட் போட்டு வருகின்றனர். கனெக்ட் திரைப்படத்தில் ஹாரருக்கு குறைவே இல்லை என விமர்சனங்கள் குவிந்து உள்ளன.

ஷாருக்கான் ஹீரோயின்

ஷாருக்கான் ஹீரோயின்

நயன்தாரா தமிழில் எந்தவொரு டாப் ஹீரோவுடனும் தற்போது கமிட் ஆகவில்லை என்றாலும், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X