நயன்தாரா கழுத்தில் புதிய டாட்டூ.. டிரெண்டாகும் புகைப்படம்.. அங்க டாட்டூ போட்ட என்ன அர்த்தம் தெரியுமா?

சென்னை: நடிகை நயன்தாராவின் கழுத்துக்கு பின் புறம் புதிதாக ஒரு டாட்டூ போடப்பட்டுள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் வெற்றியைத் தொடர்ந்து கணவர் விக்னேஷ் சிவன் உடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனியாவில் சுற்றுலா செய்து வருகிறார் நயன்தாரா.

அங்கே இருவரும் மாறி மாறி அன்பை பொழிந்த படி போட்டோக்களாக எடுத்துத் தள்ளி வருகின்றனர்.

கணவருடன் ஓவர் ரொமான்ஸ்

கணவருடன் ஓவர் ரொமான்ஸ்

லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பிருந்தே அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விக்கியுடன் சுற்றுலா சென்று வரும் நயன் திருமணத்திற்கு பிறகு தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்று வந்த நிலையில், தற்போது ஸ்பெயின், பார்சிலோனியாவில் கணவருடன் ஓவர் ரொமான்ஸ் செய்து வருகிறார்.

எல்லாமே அப்டேட்

எல்லாமே அப்டேட்

இன்ஸ்டாகிராமில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கே 2.7 மில்லியன் ரசிகர்கள் உள்ள நிலையில், நயன்தாராவுடன் அவர் எடுத்துக் கொண்ட அழகிய தருணங்கள் அடங்கிய அனைத்து புகைப்படங்களையும் பதிவிட்டு அப்டேட் செய்து வருகிறார். சோஷியல் மீடியாவில் நயன்தாரா இல்லை என்றாலும், அந்த குறையே தெரியாமல் நயனின் அத்தனை லேட்டஸ்ட் போட்டோக்களையும் விக்கியே போஸ்ட் செய்து விடுகிறார்.

கழுத்தில் டாட்டூ

கழுத்தில் டாட்டூ

இந்நிலையில், நயன்தாராவின் கழுத்துக்கு பின் புறம் நெக் டாட்டூ ஒன்று இருப்பதை நெட்டிசன்கள் சிலர் கண்டுபிடித்து டிரெண்ட் செய்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் வெளியிடும் நயன்தாராவின் போட்டோக்களில் பெரும்பாலும் அவரது பின்புற கழுத்து பகுதி தெரியாத வண்ணமே உள்ள நிலையில், நயன்தாராவின் இந்த கழுத்து டாட்டூ போட்டோவை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து வருகின்றனர்.

என்ன அர்த்தம்

என்ன அர்த்தம்

அந்த பகுதியில் டாட்டூவை பலரும் போட மாட்டார்கள். அது ரொம்பவே கஷ்டமான ஒன்று. ஆனால், அதையும் மீறி ஒரு சிலர் அந்த இடத்தில் டாட்டூ போட்டு கெத்துக் காட்டி வருகின்றனர். அங்கே டாட்டு போட்டால் துணிச்சலான மற்றும் சவாலான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்று அர்த்தமாம்.

பிரபுதேவா பெயர் டாட்டூ

பிரபுதேவா பெயர் டாட்டூ

ஏற்கனவே நடிகை நயன்தாரா வில்லு படத்தின் சமயத்தில் பிரபுதேவாவை காதலித்து வந்த நிலையில், அவரது பெயரை பச்சைக் குத்தி இருந்தார். பின்னர் அதை அழிக்க முடியாமல் அப்படியே பாசிட்டிவிட்டி என்று மாற்றம் செய்தார். இந்நிலையில், நயன்தாராவின் புதிய கழுத்து டாட்டூ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X