»   »  அஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா?

அஜீத்தின் புதுப் படம்.. ஜோடி நயன்தாராவா ஸ்ருதியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மகன் பிறந்த சந்தோஷத்துடன், அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் அஜீத். இது அவருக்கு 56வது படம். இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாததால் வழக்கம்போல 'தல 56' என்று குறிப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்தப் படத்தை இயக்குபவர் சிவா. சிறுத்தை, வீரம் படங்களைத் தந்தவர்.

Nayanthara or Shruti Hassan in Ajith's 56th movie

அஜீத்தை வைத்து ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களைத் தயாரித்த ஏஎம் ரத்னம்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் (அடுத்த படமும் இவர்தான் என்கிறார்கள்!).

இதற்கு முன் கிரீடம், பில்லா படங்களில் நடித்திருந்தாலும், வீரம் படத்தில் அஜீத்துடன் பிரதான காமெடியனாக இணைந்த சந்தானத்துக்கு, இந்தப் படத்திலும் முக்கியத்துவம் உள்ள வேடத்தைத் தந்துள்ளாராம் இயக்குநர்.

அஜீத்துக்கு ஜோடி யார் என்பதுதான் இப்போது பிரதான கேள்வி. நயன்தாரா மற்றும் ஸ்ருதி ஹாஸனுடன் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

நயன்தாரா ஏற்கெனவே பில்லா, ஆரம்பம் படங்களில் அஜீத்துடன் ஜோடி போட்டுவிட்டார். ஸ்ருதி ஹாஸனுக்கு இதுவே முதல்முறை.

English summary
Sources say that Nayanthara or Shruti Haasan will be Ajith’s heroine in Thala 56 and Santhanam will be playing the comedian in the film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil