»   »  வழி மாறும் நயன்தாரா: மறுபடியும் அட்ஜஸ்ட்மென்டா? #Nayanthara

வழி மாறும் நயன்தாரா: மறுபடியும் அட்ஜஸ்ட்மென்டா? #Nayanthara

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடும் கமல்! | மறுத்த நயன் தாரா, அனுஷ்கா!-வீடியோ

சென்னை: நயன்தாரா மீண்டும் அட்ஜஸ்ட் செய்துள்ளார் போன்று என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் மாவட்ட கலெக்டராக நடித்த அறம் படம் சூப்பர் ஹிட்டானது.

அந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

படங்கள்

படங்கள்

இனி கிளாமராக நடிப்பது இல்லை, மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களில் நடிப்பது இல்லை என்று இயக்குனர்களிடம் தெரிவித்து வருகிறார் நயன்தாரா.

 இந்தியன் 2

இந்தியன் 2

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நயன்தாரா தான் ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அஜீத் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அஜீத்

அஜீத்

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாரா என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவா படத்தில் ஹீரோயின்களுக்கு பெரிதாக வேலை இருக்காது என்பது நயன்தாராவுக்கு தெரியாதா என்ன?

 அட்ஜஸ்ட்

அட்ஜஸ்ட்

அஜீத் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதால் தனது கொள்கையை தளர்த்தி விசுவாசம் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் போன்று. முன்னதாக கே.எஸ். ரவிக்குமாருக்காக கொள்கையை தளர்த்தி ஜெய் சிம்ஹா படத்தில் நடித்தார்.

 வழி மாற்றம்

வழி மாற்றம்

இப்படி ஒவ்வொரு ஹீரோ மற்றும் இயக்குனர்களுக்காக கொள்கையை தளர்த்திக் கொண்டிருந்தால் மறுபடியும் பழையபடி கிளாமர் மற்றும் காதல் ஹீரோயினாக தான் நயன்தாரா இருக்க முடியும். அதிரடியில் இறங்குவது கடினம்.

English summary
Nayanthara has relaxed her rules yet again. This time it is for her favourite actor Ajith. She has decided to do strong characters that will be remembered forever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil