»   »  ஆர்யா ஹீரோயின்களை பார்த்தால் என்ன சொல்வார்?: தொழில் ரகசியத்தை கசியவிட்ட நயன்தாரா

ஆர்யா ஹீரோயின்களை பார்த்தால் என்ன சொல்வார்?: தொழில் ரகசியத்தை கசியவிட்ட நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்யா எந்த ஹீரோயினை பார்த்தாலும் என்ன சொல்வார் என்பதை நயன்தாரா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜீத், விஜய், ஆர்யா உள்ளிட்டோர் பற்றி பேசியுள்ளார்.

அதில் ஆர்யா பற்றி நயன்தாரா கூறியிருப்பதாவது,

விளையாட்டு

விளையாட்டு

நான் பணியாற்றிய ஹீரோக்களிலேயே ஆர்யா சரியான விளையாட்டுப் பிள்ளை. அவர் சீரியஸாக இருந்து நான் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. எப்பவுமே ஜாலியாக இருப்பார்.

ஃபன்

ஃபன்

ஆர்யாவுக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி. செட்டில் நாம் ஏதாவது சீனை நினைத்து சீரியஸாக யோசித்துக் கொண்டிருப்போம். அப்போ ஏதாவது செய்து சொதப்பிவிட்டு நாம் என்ன யோசித்தோம் என்பது மறந்துவிடும்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

ராஜா ராணி படத்தில் நடித்தபோது ஒரு நாள் ஆர்யாவுக்கு மதியம் தான் ஷூட்டிங். காலையில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். நான் சீரியஸாக அழும் காட்சியை படமாக்கினார்கள்.

அழுகை

அழுகை

நான் அழுதுகிட்டு இருந்தேன் திடீர் என்று பார்த்தால் கேமரா மேன்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஃபீல் பண்ணி அழுது கொண்டிருந்தேன் அவர்களோ சிரித்தார்கள்.

ஹீரோ

ஹீரோ

பார்த்தால் அந்த ஆர்யா பையன் பின்னால் நின்று கொண்டிருந்தார். சோபா மீது படுத்துவிட்டார். அவர் என்னென்னவோ பண்ணி சிரிச்சு அப்புறம் நான் மீண்டும் கிளிசரின் போட்டு அழுது நடித்தேன்.

டயலாக்

டயலாக்

எல்லா நடிகைகளிடம் நீங்கள் தான் எனக்கு பிடித்தவர் என்று ஒரே டயலாக்கை சொல்வார் ஆர்யா. ஆர்யாவுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பது அவருக்கு தான் தெரியும் என்றார் நயன்தாரா.

English summary
Nayanthara has said that her good friend Arya tells all his leading ladies that she is his favourite.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil