தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் கூட்டணி… விஷாலுடன் மோதல்: துணிந்து களமிறங்கிய நயன்தாரா!

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார்.

முதன்முறையாக தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவின் படங்கள் பற்றிய இரண்டு சூப்பர் அப்டேட்களும் நேற்று வெளியாகியுள்ளன.

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் டீசரும், படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். முதன்முறையாக கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை ஆண் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா, செம்ம ஹேப்பி மூடில் இருப்பதாகக் கூறப்படுகிறது. நயன்தாராவின் பிறந்தநாளுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறிய நிலையில், அவரது படங்கள் பற்றிய இரண்டு சூப்பர் அப்டேட்கள் நேற்று வெளியானது.

ரிலீஸ் தேதியுடன் கனெக்ட் டீசர்

ரிலீஸ் தேதியுடன் கனெக்ட் டீசர்

அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நயன்தாராவுடன் சத்யராஜ், அனுபம் கெர் ஆகியோர் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு, டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் நயன், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கனெக்ட் படத்தின் கதை முழுவதும் நயன்தாராவை சுற்றியே நடக்கும் என சொல்லப்படுகிறது.

விஷாலுடன் மோதல்

விஷாலுடன் மோதல்

நயன்தாராவின் கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், விஷாலின் லத்தியும் டிசம்பர் 25ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிறிஸ்துமஸ் ரிலீஸில் நயன்தாராவின் கனெக்ட் திரைப்படமும், விஷாலின் லத்தியும் நேருக்கு நேர் மோதவுள்ளன. விஷாலின் லத்தில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், சில காரணங்களால் அது தள்ளிக்கொண்டே போக, இப்போது நயன்தாராவின் கனெக்ட் படத்துடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. விஷால் - நயன்தாரா இருவரும் ஜோடியாக நடித்துள்ள நிலையில், தற்போது அவர்கள் லீடிங் ரோலில் நடித்துள்ள படங்கள் ஒன்றாக வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாராவின் 81வது படம்

நயன்தாராவின் 81வது படம்

இதனிடையே நயன்தாராவின் 81வது படம் குறித்த அறிவிப்பும் நேற்று வெளியானது. தனுஷின் கொடி, பட்டாசு, சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டை, எதிர் நீச்சல் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த துரை செந்தில்குமார், நயன்தாராவின் 81வது படத்தை இயக்குகிறார். ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சீக்கிரமே தொடங்கவுள்ளதாம். இந்நிலையில், NT 81 என்ற தலைப்பில் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. யானையின் மீது நயனின் கை இருக்கும் வகையில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X