என்னா ஸ்டைல்.. பிரபல ஹீரோ வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா.. வைரலாகும் போட்டோ!

By

சென்னை: பிரபல ஹீரோவின் வீட்டுக்கு நடிகை திடீர் விசிட் அடித்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மவுலி, ஊர்வசி உட்பட பலர் நடித்துள்ளனர்

அம்மனாக நடித்தார்

அம்மனாக நடித்தார்

என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி இருந்த இந்த படம், வரவேற்பை பெற்றது. இதில் நடிகை நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து, அவர் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார்.

காத்து வாக்குல

காத்து வாக்குல

இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார், நயன்தாரா.

எர்ணாகுளத்தில் நிழல்

எர்ணாகுளத்தில் நிழல்

கொரோனா காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதற்கிடையே, மலையாளத்தில் உருவாகும் நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார், நயன்தாரா. இதில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடிக்கிறார். அப்பு என் பட்டாத்திரி இயக்குகிறார்.

சின்ன காட்சி

சின்ன காட்சி

இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்தொடங்கியது. இதன் படப்பிடிப்பில், நயன்தாரா சமீபத்தில் இணைந்தார். குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கனவே டிவென்டி 20 படத்தில் சின்ன காட்சியில் நடித்திருந்தனர்.

திடீர் விசிட்

திடீர் விசிட்

12 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், நடிகை நயன்தாரா, தன்னுடன் நடிக்கும் குஞ்சாக்கோ போபன் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

இஜாஹாக் குஞ்சாக்கோ

இஜாஹாக் குஞ்சாக்கோ

அங்கு அவர் மகன் இஜாஹாக் குஞ்சாக்கோவை கையில் தூக்கி வைத்தபடி செம ஸ்டைலாக எடுத்துள்ள புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. குஞ்சாக்கோ போபன், அவர் மனைவி ஆகியோருடனும் போட்டோ எடுத்துக்கொண்டார், நயன்தாரா. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X