நயன்தாராவின் நெற்றிக்கண் ஓடிடி ரிலீஸ்...ஜூலையில் வெளியிட திட்டம்

சென்னை : ரவுடி பிக்சர்ஸ் நிறவனத்தில் அடுத்த தயாரிப்பாக நெற்றிக்கண் படம் தயாராகிறது. இந்த படத்தை டைரக்டர் மிலிண்ட் ராவுடன் இணைந்து வினேஷ் சிவன் இயக்க உள்ளார்.

NAYANTHARAS NEXT TO HAVE A DIRECT OTT RELEASE ON THIS PLATFORM

ந யன்தாரா, லியூக் கென்னி முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு வசனம் எழுது உள்ளார்.

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மட்டுமல்ல கிராஸ் பிக்சர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், கே.எஸ்.மயில்வாகனம் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டு. பெரிய அளவில் பாராட்டை பெற்றது. இதில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார். இவர் கொடூர குற்றவாளி ஒருவனை பிடிப்பது தான் படத்தின் கதை.

லேட்டஸ்ட் தகவலாக கொரோனா நோய் தொற்று காலம் என்பதால் இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யவில்லையாம். அதற்கு பதிலாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய உள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த ஆண்டு ஜுலை மாதம் நெற்றிக்கண் படம் ரிலீசாகும் என கூறப்படுகிறது.

இதற்கு முன் மலையாளத்தில் நயன்தாரா நடித்த நிழல் படமும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் நெற்றக்கண் படமும் ஓடிடி.,யிலேயே ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X