»   »  மீண்டும் பேயாக மாறும் ‘மாயா’..!

மீண்டும் பேயாக மாறும் ‘மாயா’..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாயா பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் நயன்தாரா.

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார் நடிகை நயன்தாரா. தொடர்ந்து வெற்றிப்பட நாயகியாக வலம் வரும் அவர், சமீபகாலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடந்த வருடம் அவர் நடித்த பேய்ப் படமான மாயா பெரிய அளவில் வெற்றி பெற்றது.

பேய் மோகம்...

பேய் மோகம்...

நயன்தாராவைத் தொடர்ந்து தற்போது நடிகைகள் பலரும் பேயாக மாற ஆர்வம் காட்டி வருகின்றனர். மாயா படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார் நயன்.

மீண்டும் பேய்...

மீண்டும் பேய்...

இந்நிலையில் மீண்டும் ஒரு பேய்ப்படத்தில் நடிக்க இருக்கிறாராம் அவர். இப்படத்தை ‘களவாணி', ‘வாகைசூடவா' ஆகிய படங்களை இயக்கிய சற்குணத்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய தாஸ் ராமசாமி என்பவர் இயக்குகிறார்.

தம்பி ராமையா...

தம்பி ராமையா...

சற்குணம், நேமிசந்த் ஜபாக் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார். இதில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விரைவில் ஷூட்டிங்...

விரைவில் ஷூட்டிங்...

இப்படத்திற்கு இன்னும் தலைப்பை வைக்கப்படவில்லை. இம்மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரில்லர் படம்...

திரில்லர் படம்...

திகில், க்ரைம் நிறைந்த காமெடி திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்கிறார்.

ஒரு காலத்தில் நாயை வைத்துப் படமெடுத்தார் ராம நாராயணன். இப்போது பேயை வைத்துக் கிலி கொடுக்கிறார்கள்.. நடக்கட்டும் நடக்கட்டும்.

English summary
Nayanthara who is busy with Vikram's film Iru Mugan has signed on a new Tamil film. She will be playing the lead role in an exciting thriller which is produced by Nemichand Jhabak.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil