»   »  முருகதாஸை பழிவாங்க மீஞ்சூர் கோபி படத்தில் நடிக்கிறாரா நயன் தாரா?

முருகதாஸை பழிவாங்க மீஞ்சூர் கோபி படத்தில் நடிக்கிறாரா நயன் தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன் தாரா நடிக்க வந்த புதிதில் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடித்த கஜினியில் ஒரு மருத்துவ மாணவி கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தின் போதே முருகதாஸுக்கும் நயன் தாராவுக்கும் பிரச்னை என சொல்லப்பட்டது. தனக்கு முக்கியத்துவம் தராமல் அசின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தந்ததால் நயனுக்கு வருத்தம் என்றார்கள். அதன் பின் எந்த படத்திலும் இருவரும் இணையவில்லை.

Nayanthara's revenge against Murugadass

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான கத்தி படத்துக்கு எழுந்த பிரச்னைகளை யாரும் மறந்துவிட மாட்டார்கள். கத்தி படத்தின் கதை என்னுடையது. என் கதையை துரோகம் செய்து திருடி படமாக்கி விட்டார் முருகதாஸ் என மீஞ்சூர் கோபி என்பவர் சர்ச்சையை கிளப்பினார். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது.

அதே மீஞ்சூர் கோபிக்கு கால்ஷீட் கொடுத்து படத்தை எடுக்கவும் பெரிய அளவில் உதவி செய்திருக்கிறார் நயன் தாரா. இப்போது முதலில் சொன்ன விஷயத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...!

English summary
Top actress Nayanthara has gave her call sheet to new director Meenjur Gopi to take a revenge on director Murugadass.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil