»   »  லைகாவின் 'கோலமாவு கோகிலா' - நயன்தாராவின் அடுத்த படம்!

லைகாவின் 'கோலமாவு கோகிலா' - நயன்தாராவின் அடுத்த படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் நடிப்பில் நெல்சன் இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு 'கோலமாவு கோகிலா' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுருக்கமாக 'கோ கோ' எனவும் டைட்டில் கார்டில் குறிப்பிட்டுள்ளார்கள்.

Nayanthara's upcoming film announced

'கோலமாவு கோகிலா' படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவிருக்கிறார். நயன்தாரா தற்போது நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் இந்தப் படத்தில் நடிப்பார் எனத் தெரிய வருகிறது.

தெலுங்கில், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் 'சைரா' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். பெரிய படங்களில் முன்னணி நாயகியாகவும், சில படங்களில் கதையின் நாயகியாகவும் நடிக்கத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம். காதும்மா கெத்து!

English summary
Nayanthara's next film named as 'Colamavu Cokila'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil