Don't Miss!
- Finance
வீட்டுக் கடனில் முக்கிய அறிவிப்பு.. நடுத்தர மக்களுக்கு 'இது' கிடைக்க வாய்ப்பு அதிகம்..! #BUDGET2023
- News
பிஐஎஸ் அரசு முத்திரையுடன்.. போலி தங்க நகைகள்.. "கண்டுபிடிக்கவே முடியாதாம்".. அதிர்ச்சியில் போலீஸ்
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நயன்தாராவின் ஹாரர் படம் ‘கனெக்ட்‘ வெளியாவதில் சிக்கல்?.. திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு!
சென்னை : நயன்தாராவின் கனெக்ட் படத்திற்கு திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் கனெக்ட்.
ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில், நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Bigg Boss Tamil 6: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான்.. லீக்கான தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் 9ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கும் நயன்தாரா தொடர்ந்து தனது திரைப்பயணத்திலும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

ஜவான்
மேலும், இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியான நடிக்கும் நயன்தாரா இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.

கனெக்ட் டீசர்
அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் கனெக்ட் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் டீசர் நயன்தாராவின் பிறந்த நாள் வெளியானது. இந்த டீசரில், நயன்தாராவுடன் இருக்கும் குழந்தைக்கு பேய் பிடித்துள்ளது போல கதையமைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அனுபம் கேர் வீடியோ கால் மூலம் பேய் ஓட்டுபவராக வருகிறார். இப்படம், 99 நிமிட நீளத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா படத்திற்கு வந்த சிக்கல்
இந்நிலையில், கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி வரும் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 99 நிமிடங்கள் ஓடும் இந்த படத்திற்கு இடைவேளை இல்லை என இயக்குனர் அஷ்வின் தெரிவித்திருந்த நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடைவெளை இல்லாமல் படத்தை வெளியிட முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருந்த நிலையில், படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.