»   »  எக்காரணம் கொண்டும் பிரபு தேவாவுடன் மட்டும் நடிக்கக் கூப்பிடாதீங்க! - இது நயன் வேண்டுகோள்

எக்காரணம் கொண்டும் பிரபு தேவாவுடன் மட்டும் நடிக்கக் கூப்பிடாதீங்க! - இது நயன் வேண்டுகோள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

'சிம்புவுடன் மீண்டும் நடிச்சது ஒரு விபத்து... ஆனா இதே மாதிரி பிரபுதேவாவுடன் நடிக்க மட்டும் கூப்பிட்டுவிடாதீர்கள்' என தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்த தயாரிப்பாளரிடம் கேட்டுக் கொண்டாராம் நயன்தாரா.

நயன்தாரா இப்போது மிகவும் பிஸியாக உள்ளார் தமிழில். தெலுங்குப் படங்களிலும் நிறைய வாய்ப்புகள் வருகின்றன.

Nayanthara strictly says No to Prabhu Deva

அப்படி வந்த வாய்ப்புகளில் ஒன்றுதான் பிரபுதேவாவுடன் மீண்டும் நடிப்பது.

ஏற்கெனவே சிம்புவிடம் காதலில் விழுந்தவர் நயன். அது முறிந்த பிறகு, பிரபுதேவாவைக் காதலித்து, அவருக்காக மதம் மாறி, திருமணம் வரை போய், பிரிந்து வந்தார் நயன்தாரா.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது மீண்டும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. இருவரும் விருந்துகளில் ஜோடியாக பங்கேற்கிறார்கள். பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடுகிறார்கள். தாங்கள் நல்ல நண்பர்களாக இருப்பதாக பேட்டிகள் கொடுக்கிறார்கள்.

Nayanthara strictly says No to Prabhu Deva

இந்தியில் பரபரப்பான இயக்குநராகத் திகழும் பிரபு தேவா, மீண்டும் தமிழ்ப் படங்கள் இயக்கவும், தெலுங்கில் நடிக்கவும் தயாராகிவிட்டார். அப்படி அவர் ஒப்புக் கொண்ட தெலுங்குப் படத்துக்காகத்தான் நயன்தாராவிடம் பேசினார்களாம்.

அதற்கு நயன்தாரா சொன்ன பதில்தான் மேலே நீங்கள் படித்தது!

யார் கண்டது.. இன்னும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு நயனின் இந்த மனநிலை மாறினாலும மாறலாம்!

English summary
Nayanthara strictly says no to an offer to play against Prabhu Deva in Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil