இரண்டு ரோஸ்களை வைத்து டைட்டானிக்...விக்னேஷ் சிவனை கலாய்த்த நயன்தாரா

சென்னை : ஒரு ஜாக், இரண்டு ரோஸ்களை வைத்து தான் டைட்டானிக் படத்தை இயக்கியதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதை, அவரது காதலியான நயன்தாராவே வெளிப்படையாக கலாய்த்துள்ளார். இதனை ரசித்து, மக்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.

வலிமை படத்திற்கு மாஸாக இரண்டு பாடல்களை எழுதி அனைவரையும் கவர்ந்துள்ள விக்னேஷ் சிவன், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதையை மையமாகக் கொண்ட படம். காமெடி, ரொமான்டிக் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் 2 படங்கள்

ஒரே நாளில் 2 படங்கள்

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக இரண்டு நாட்களுக்கு முன் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். கமலின் விக்ரம் படம் ரிலீசாகும் அதே நாளில் தான் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இவை இரண்டுமே விஜய் சேதுபதி நடித்துள்ள படங்கள் தான். என்றாலும் ஒன்றில் ஹீரோவாகவும், மற்றொன்றில் வில்லனாக நடித்துள்ளார். இதனால் இரண்டு படங்களுமே எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன.

விதவிதமான போஸ்டர்

விதவிதமான போஸ்டர்

படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்ததில் இருந்து விதவிதமாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார் டைரக்டர் விக்னேஷ் சிவன். நேற்று, பாகுபலி 2 படத்தில் பிரபாஸ்- அனுஷ்கா இருவரும் இணைந்து வில் விடும் பிரபலமான போஸ்டரை மாற்றி, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் வில் விடுவது போன்ற போஸ்டரை வெளியிட்டார். ஏற்கனவே டைட்டானிக் படத்தில் கப்பல் நுனியில் நிற்பதை போல், கப்பலில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டார்.

டைட்டானிக் படம் இயக்கிய போது

டைட்டானிக் படம் இயக்கிய போது

இந்நிலையில் நேற்று, காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் BTS வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி டைட்டானிக் பட நாயகன் ஜாக் போன்றும், நயன்தாரா மற்றும் சமந்தா ரோஸ் போலவும் கருப்பு நிற உடையில் காரில் இருந்து இறங்கி வரும் வீடியோவை ளெியிட்டுள்ளார். அதோடு, நான் ஒரு ஜாக் மற்றும் 2 ரோஸ்களுடன் டைட்டானிக் படத்தை இயக்கிய போது என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

எங்களை வைத்து காமெடி பண்றீங்களா

எங்களை வைத்து காமெடி பண்றீங்களா

விக்னேஷ் சிவன் இப்படி கேப்ஷன் பதிவிட்டுள்ள நிலையில், அந்த வீடியோவில் காரில் இருந்து சிரித்த படி இறங்கி வரும் நயன்தாரா, எங்களை வைத்து காமெடி பண்றீங்களா என கேட்டு விக்னேஷ் சிவன் மற்றும் செட்டில் உள்ளவர்களை கலாய்கிறார். விக்னேஷ் சிவன் பகிர்ந்த இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X