வாழ்த்துவாங்கன்னு நினைச்சா? இப்படியெல்லாம் பேசுறாங்களே.. வருத்தப்பட்டு கண்கலங்கிய நயன்தாரா!

சென்னை: நயன்தாரா என்றாலே எதையும் சரியாக செய்ய மாட்டார், பிழையாய் தான் இருக்கும் என்கிற முடிவுக்கு வந்து தானே இப்படியெல்லாம் பேசுறாங்க என புதிதாக பிறந்த குழந்தைகளை கொஞ்ச முடியாமல் ட்ரோல்கள் மற்றும் சர்ச்சைகளால் நடிகை நயன்தாரா கண்கலங்கி வருத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அக்டோபர் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தானும், நயன்தாராவும் இரு ஆண் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என சந்தோஷமாக பதிவிட்டு இருந்தார்.

நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்த செய்தி அறிந்ததும் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. ஆனால், நயன்தாரா அம்மாவான செய்தி அறிந்தும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவிக்காமல் மெளனம் சாதித்தனர்.

குழந்தை பிறந்ததும்

குழந்தை பிறந்ததும்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்த செய்தி அறிந்ததுமே ஓடிச் சென்று பார்த்த நடிகை நயன்தாரா தனக்கு இரட்டைக் குழந்தைகளா என சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின.

கோயில் கோயிலாக வேண்டுதல்

கோயில் கோயிலாக வேண்டுதல்

இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் பதிவுத் திருமணம் முடிந்த நிலையில், பல வருடங்களாக திருமணத்தை ரகசியமாக வைத்திருக்க காரணமே இருவருக்கும் குழந்தை பிறக்காமல் இருந்தது தானா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. மேலும், நயன்தாரா சில ஆண்டுகளாகவே விக்னேஷ் சிவன் உடன் கோயில் கோயிலாக சுற்றி வந்தது எல்லாமே குழந்தை வரம் வேண்டி தான் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

வாழ்த்துவாங்கன்னு நினைச்சேன்

வாழ்த்துவாங்கன்னு நினைச்சேன்

குழந்தை பிறந்த செய்தியையும் மறைத்து விட்டால், பின்னால் பெரிய பிரச்சனை வரும் என்பதால், வெளிப்படையாக சொல்லி விடலாம் என்கிற முடிவுக்கு வந்த நிலையில், விக்னேஷ் சிவன் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துவார்கள் என நினைத்தால், இப்படி தேவையில்லாமல் ட்ரோல் செய்து மனசை உடைச்சிட்டாங்களே என ரொம்பவே ஃபீல் செய்துள்ளாராம்.

வருத்தப்பட்ட நயன்தாரா

வருத்தப்பட்ட நயன்தாரா

கவின், டிடி நீலகண்டன் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்களை தவிர சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக உள்ள யாருமே வாழ்த்து சொல்லவில்லை என்றும், திருமணத்துக்கு வந்த பிரபலங்கள் கூட இந்த விவகாரத்தில் மெளனம் காத்தது அவரை மனதளவில் ரொம்பவே டிஸ்டர்ப் செய்து விட்டதாகவும், சில பிரபலங்கள் தேவையில்லாமல் பிரச்சனையை பெரிதாக்கியதும் அவரை வருத்தப்பட்டு கலங்க வைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கணவர் ஆறுதல்

கணவர் ஆறுதல்

இதற்கெல்லாம் ஃபீல் பண்ண வேண்டாம். வீட்டுக்கு வீடு வாசப்படி இருக்கத்தான் செய்யும். நாம் நம்முடைய குழந்தைகளுடன் இந்த பொன்னான நேரத்தை சந்தோஷமாக செலவழிப்போம். என்ன வந்தாலும், பார்த்துக் கொள்ளலாம் என்று ஒட்டுமொத்த நம்பிக்கையும் கொடுத்து கணவர் விக்னேஷ் சிவன் ஆறுதல் சொன்ன பிறகே நயன்தாரா அமைதியடைந்தாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X