நீங்க கண்டிப்பா வரணும்...முதல்வருக்கும் நேரில் சென்று அழைப்பு வைத்த நயன்தாரா–விக்னேஷ் சிவன்

சென்னை : தங்கள் திருமணத்திற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்து விட்டு வந்துள்ளனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். இதனால் இவர்கள் திருமணத்தில் இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

நானும் ரெளடி தான் படத்தின் போது காதலிக்க துவங்கிய நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், சமீபத்தில் ரிலீசான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்ததும் தங்களின் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். முதலில் இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக கூறப்பட்டது. பிறகு வெளியான இவர்களின் திருமண அழைப்பிதழில் மகாபலிபுரத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

200 பேருக்கு அழைப்பு

200 பேருக்கு அழைப்பு

நடிகை நயன்தாரா - டைரக்டர் விக்னேஷ் சிவனின் திருமணம் ஜுன் 9 ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. அதிகாலை 4.30 மணி துவங்கி 7 மணி வரை இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 30 பேர் விவிஐபி.,க்கள்.

கல்யாணமா? சினிமாவா?

கல்யாணமா? சினிமாவா?

ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமண விழாவை டைரக்டர் கெளதம் மேனன் இயக்க உள்ளதாகவும், நெட்ஃபிளிக்சில் இந்த திருமண விழா ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Recommended Video

Nayan-Wikki திருமணம் , புதிய Update கொடுத்த Vignesh Shivan *Celebrity |Filmibeat Tamil
முதல்வருக்கு நேரில் அழைப்பு

முதல்வருக்கு நேரில் அழைப்பு

இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டானை நேரில் சந்தித்து தங்களின் திருமண அழைப்பிதழை கொடுத்து, திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது அங்கிருந்த நடிகரும், விநியோகஸ்தரும், எம்எல்ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலினுக்கும் திருமண அழைப்பு விடுத்துள்ளனர்.

செம டிரெண்டாகும் போட்டோ

செம டிரெண்டாகும் போட்டோ

விக்னேஷ் சிவன் வெள்ளை சட்டை, பேண்டிலும், நயன்தாரா வெள்ளை மற்றும் கருப்பு புடவை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் அசத்தலாக வந்திருந்தனர். இவர்கள் ஜோடியாக வந்த இந்த போட்டோக்கள் செம டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X