»   »  நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய திருமணமா?: அதனால் தான் அப்படி செய்கிறாரா?

நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய திருமணமா?: அதனால் தான் அப்படி செய்கிறாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ரகசியமாக திருமணமாகிவிட்டதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். விக்கியின் அம்மா நயன் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டார். எனக்கு மருமகள் என்றால் அது நயன்தாரா தான் என அவரே கூறிவிட்டார்.

நயனும், விக்னேஷ் சிவனும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லிவ் இன் இல்லையா?

லிவ் இன் இல்லையா?

நயன்தாராவும், விக்கியும் லிவ் இன் முறைப்படி வாழ்வதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர்கள் முறையாக திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

நடிப்பு

நடிப்பு

முன்னணி ஹீரோக்கள் மற்றும் சீனியர் ஹீரோக்களுடன் நடிக்க வரும் வாய்ப்புகளை எல்லாம் நயன்தாரா தட்டிக்கழிப்பதற்கு திருமணமானதே காரணமாம்.

சூர்யா

சூர்யா

விக்கி இயக்கி வரும் தானா சேர்ந்த கூட்டத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டாராம். அவர் தற்போது நடித்து வரும் படங்களிலும் அவருக்கு ஜோடி இல்லாமல் உள்ளது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

முன்பும் கூட

முன்பும் கூட

முன்பும் கூட நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் வைத்து ரகசியமாக திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
According to reports, Nayanthara and her director boyfriend Vignesh Shivan have got married in a hush hush manner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil